சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தேர்தலில் போட்டியிட நாமினேஷன் செய்ய வந்த நிலையில், அவரை சிந்தாமணியில் ஆள் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணிக்கு எதிராக பூ வியாபாரிகள் சங்கத்தில் போட்டியிடுகிறார் மீனா. அவருக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ள முத்து, ஸ்வேதா மற்றும் ஸ்ருதி அவருடன் சென்று பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். இதனிடையே சிந்தாமணி எலெக்ஷனில் போட்டியிட நாமினேஷன் செய்துவிட்டு வந்த நிலையில், அந்த நேரத்தில் மேள தாளங்கள் முழங்க மீனாவை நாமினேஷன் செய்ய அழைத்து வந்திருந்தார் முத்து. இதைப்பார்த்த சிந்தாமணி வயித்தெறிச்சல் படுவதோடு, இவளை எதாவது பண்ணனும் என பிளான் போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
மீனாவுக்கு கத்திக்குத்து
மீனாவுக்கு இருக்கும் சப்போர்டை பார்த்து பயப்படும் சிந்தாமணி, காருக்குள் சென்று ஒரு ரெளடிக்கு போன் பண்ணி, எல்லாம் ரெடியா, நீ வந்து முத்துவை கத்தியால் குத்திவிடு, இதைப்பார்த்து மீனா பயந்துபோய் இந்த எலெக்ஷனிலேயே நிற்கக்கூடாது என சொல்லி போனை வைக்கிறார். வெளியே முத்துவும், மீனாவும் பயங்கர சந்தோஷத்தில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முகத்தில் கர்சிப்பை கட்டிக் கொண்டு, கத்தியுடன் வரும் ஒருவர், முத்துவை குத்த வருகிறார். இதை நோட் பண்ணிய மீனா, குறுக்கே சென்றுவிடுகிறார். இதனால் அந்த நபர் மீனாவை குத்திவிடுகிறார்.
35
நாமினேஷன் தாக்கல் செய்த மீனா
கத்தியால் அந்த நபர் குத்தியதும் மீனா வலியால் கத்த, உடனே அந்த நபரை பிடிக்க முயற்சிக்கிறார் முத்து. அவரின் கர்சிப்பை விலக்கி முகத்தை முத்து பார்த்துவிட, அந்த நபர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், மீனா, ரத்த காயத்துடன் இருப்பதால் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடுவார் என சிந்தாமணி எதிர்பார்த்தார். ஆனால் மீனாவோ, ரத்த காயத்துடனே சென்று நாமினேஷன் தாக்கல் செய்திருக்கிறார். பின்னர் தான் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டு போடும் டாக்டர், அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லி உள்ளார்.
பின்னர் மீனாவை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்கிறார் முத்து. அப்போது என்னால உங்க உயிருக்கு தான் ஆபத்து, அதனால் நாமினேஷன் செய்ததை வாபஸ் வாங்கிவிடலாம். இந்த தேர்தலில் நான் போட்டியிடல என கூறுகிறார் மீனா. உடனே முத்து, இதற்கெல்லாம் வாபஸ் வாங்கக் கூடாது. இது எல்லாமே அந்த சிந்தாமணியோட வேலை தான். நம்மளை பயமுறுத்துறதுக்காகவே இப்படி செய்திருப்பாள். அவளுக்கு இந்த தேர்தலில் ஜெயித்து நீ தக்க பாடம் புகட்ட வேண்டும் என முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையும் நீ எலெக்ஷன்ல இருந்து வாபஸ் வாங்க வேண்டாம் என கூறுகிறார்.
55
விசாரணையில் இறங்கும் முத்து
இதையடுத்து முத்து செல்வத்துக்கு போன் பண்ணி, மீனாவை கத்தியால் குத்திய ரெளடி பற்றி விசாரிக்கிறார். அவன் தப்பிச்சு போயிட்டான், இருந்தாலும் இதெல்லாம் சிந்தாமணியோட வேலையா தான் இருக்கும் என கூறுகிறார் செல்வம். மறுபுறம் மீனாவை பார்க்க, அவரின் அம்மா, சீதா, ஸ்ருதி, ஸ்வேதா ஆகியோர் விஜயா வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் மீனா அழுகிறார். அவரை அனைவரும் சமாதானப்படுத்துவதோடு, நீ கண்டிப்பா இந்த எலெக்ஷன்ல போட்டியிடு என வலியுறுத்துகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.