Singappenne Serial Today April 6th Episode Promo : சன் டிவியின் மிகவும் பிரபலமான 'சிங்கப் பெண்ணே' சீரியலின் இன்றைய (ஏப்ரல் 5) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆனந்தியின் உடல்நிலை குறித்து பார்க்கலாம்.
சன் டிவியின் மிகவும் பிரபலமான 'சிங்கப் பெண்ணே' சீரியலின் இன்றைய (ஏப்ரல் 5) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ கதையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய திருப்பத்தை விளக்குகிறது. வெறும் 32 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் பதற்றத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஆனந்திக்கு ஏற்பட்ட விபத்தும், அதைத் தொடர்ந்து எழும் சட்டச் சிக்கல்களும் மையமாக உள்ளன.
ப்ரோமோவின் தொடக்கத்தில், அன்புவின் தங்கை யாழினி பெண் காவல்துறை அதிகாரியிடம் மிகவும் ஆவேசமாக. "எங்க அண்ணிக்கு இப்படி ஆனதுக்கு இவதான் மேடம் காரணம், இவளை சும்மா விடாதீங்க, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் விசாரிங்க என துளசியை காண்பித்து சொல்கிறார்" என்றார். இது ஆனந்தி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி இருப்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில், ஆனந்தி மருத்துவமனையில் படுகாயமடைந்து சுயநினைவின்றிப் படுக்கையில் இருக்கும் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. அவரது தலையில் பலத்த காயமடைந்து கட்டு போடப்பட்டுள்ளது.
ஆனந்தியின் இந்த நிலையைப் பார்த்து அவரது கணவர் அன்பு மிகுந்த வேதனையடைகிறார். அவர் ஆனந்தியின் அருகில் சென்று, "ஆனந்தி... என்னப் பாரு ஆனந்தி" என்று கதறி அழுவது பார்ப்பவர் மனதை உருக்குவதாக உள்ளது. இந்தச் சூழலில் மருத்துவர் கூறும் தகவல் கதையை மேலும் சீரியஸாக்குகிறது. ஆனந்திக்குத் தலையில் மட்டும் காயம் ஏற்படவில்லை, அவரது வயிற்றிலும் பலத்த அடிபட்டுள்ளது என்று மருத்துவர் கூறுகிறார். மேலும், ஆனந்தி கர்ப்பமாக இருப்பதால், குழந்தையின் நிலையும் மிகவும் கிரிட்டிக்கலாக இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கிறார்.
44
Baby position critical: குழந்தை பொசிஷன் கிரிட்டிக்கல்
ஆனந்தியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கருவில் இருக்கும் குழந்தையின் நிலை என என்று முனைப் போராட்டமாக இந்தக் கதை நகர்கிறது. துளசி கைது செய்யப்படுவாரா? மருத்துவர் சொன்னது போல குழந்தைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? போன்ற கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை கிடைக்கும். இந்த விறுவிறுப்பான எபிசோட் இன்று இரவு 9:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.