சுபாஷினி பாலசுப்பிரமணியம், 36 வயதான இவர் சென்னை போரூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இலங்கையில் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிப்பின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தற்கொலை செய்துள்ளார் சுபாஷினி.
24
இறப்புக்கு காரணம் என்ன?
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த சுபாஷினி, சம்பவம் நடந்ததற்கு முன்புவரை வழக்கம்போல தனது தினசரி வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத வகையில், நேற்று இரவு கணவருடன் வீடியோ கால் பேசியபோது ஏற்பட்ட குடும்ப பிரச்சனை அவரை கடுமையாக பாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனஅழுத்தம் காரணமாக திடீரென எடுத்த முடிவு, அவருடைய வாழ்க்கையை துயரமான முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறிய கருத்து வேறுபாடு கூட எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சி வட்டாரங்களில் இந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
34
யார் இந்த சுபாஷினி?
இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு இலங்கையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இனி அவன் என்கிற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து ஆரி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் திருமணத்துக்கு பின்னர் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். சன் டிவியின் கயல் சீரியலில் நடித்து வந்ததால் சென்னையில் உள்ள ஐயப்பன் தாங்கலில் வீடு வாடைகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தன்னுடைய கணவருடன் வீடியோ காலில் பேசியபோது, சுபாஷினிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மனமுடைந்து போன சுபாஷினி, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிவிட்டு போனை கட் பண்ணி இருக்கிறார். பின்னர் சென்னையில் உள்ள வீட்டிலேயே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.