அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Dec 20, 2025, 08:44 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன் மீது கல்யாணியின் ஆவி வந்திருப்பதாக பொய் சொல்லி மனோஜை ஏமாற்றி வரும் விஷயத்தை மீனா கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மனோஜை ஏமாற்றி வரும் விஷயம் மீனாவுக்கு தெரியவருகிறது. மனோஜிடம் உன் உடம்பில் கிரிஷோட அம்மா கல்யாணியின் ஆவி புகுந்துவிட்டதாக கூறி நீ ஏமாத்திக்கிட்டு இருக்க என மீனா சொல்ல, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என ஷாக் ஆகிறார் ரோகிணி. பின்னர் அவரிடம், நீ இப்படி செய்வதால் மனோஜுக்கு கிரிஷ் மீது உண்மையான பாசம் வரவே வராது. இப்போ அவருக்கு கிரிஷ் மீது வருவது பயத்தில் வரும் பாசம் என மீனா சொல்கிறார். ஆமா, ஆனா போகப் போக அந்த பாசம் உண்மையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார் ரோகிணி.

24
டென்ஷன் ஆன மீனா

நீ உன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கிற ரோகிணி, வீட்டுல நடக்கும் பிரச்சனையெல்லாம் பார்த்து மாமாவுக்கு சந்தேகம் வந்திருச்சு என சொல்லும் மீனா, நம்ம வீட்டுல ஏதோ பிரச்சனை இருக்குனு அவர் உணர ஆரம்பிச்சிட்டாரு. அதுனால தான் உன் அம்மாகிட்ட என்னை போன் பண்ணி பேச சொன்னாரு. எவ்ளோ சீக்கிரம் உண்மையை சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லிடு. அதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது. உன்கூட சேர்ந்து நானும் இந்த பொய் வலையில் மாட்டிக்கிட்டேன். முன்னாடியெல்லாம் மனசுல பட்டதை பேசிக்கிட்டு இருந்தேன். இப்போலாம் எங்க தெரியாம உண்மையை சொல்லிடுவேனோனு யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியதாக இருக்கு என குமுறுகிறார் மீனா.

34
பொய் சொல்ல தயாரான மீனா

இதையடுத்து பேசும் ரோகிணி, உண்மையை எல்லார்கிட்டயும் சொல்றேன் மீனா, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. கிரிஷை எப்படியாவது மனோஜ்கிட்ட நல்லா பழக வச்சிடுறேன். அதனால தான் அவரை ஸ்கூல்ல வந்து சர்டிபிகேட் வாங்க வச்சேன். அது எல்லாமே நான் செஞ்ச வேலை தான். மனோஜ் கிரிஷ் கிட்ட இன்னும் நல்லா பழகணும். அவங்க ரெண்டுபேருக்குள்ள ஒரு நல்ல பாண்டிங் வரணும். அதுக்காக தான் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்கனு சொல்றேன் என ரோகிணி சொல்ல, என்னால ரொம்ப நாளைக்கு இந்த பொய்யை காப்பாத்த முடியாது. மாமா இதுபத்தி உங்க அம்மாகிட்ட பேச சொல்லிருக்காரு. என்னோட நேரம் இப்போ நான் உன் அம்மாகிட்ட பேசுனமாதிரி மாமாகிட்ட போய் பொய் சொல்லனும் என புலம்பியபடி அங்கிருந்து கிளம்பி செல்கிறார் மீனா.

44
ரோகிணியின் அடுத்த பிளான் என்ன?

மீனா சென்றதும், இவ ஒருத்தி தினம் தினம் என்னை மிரட்டி டார்ச்சர் பண்ணுறா என தன் தோழி மகேஸ்வரியிடம் சொல்லி புலம்புகிறார் ரோகிணி. எனக்கென்னமோ மீனா பேசுறதை பார்த்தால், உன்னைப்பற்றிய உண்மை சீக்கிரம் வெளிய வந்துடும்னு தெரியுது என மகேஸ்வரி சொல்கிறார். நீ இதெல்லாம் ரொம்ப நாளைக்கு மறைச்சு வைக்க முடியாதுனு நினைக்குறேன் என மகேஸ்வரி சொல்ல, என் தலையெழுத்து அப்படிதான் ஆகனும்னு இருந்தால் யாரால மாத்த முடியும் என கூறுகிறார் ரோகிணி. இதையடுத்து என்ன ஆனது? ரோகிணியின் அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories