
எப்போதும் ஒரே மாதிரியாக காஷ்டியூம் அணிந்து கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வந்தவர் தான் கார்த்திக். தனது மாமியார் சாமுண்டீஸ்வரி வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக எப்போதும் வேஷ்டி சட்டையில் மட்டுமே வலம் வந்தார். ஒரு நாள் கூட அவர் பேண்ட் சட்டை அணிந்தது இல்லை. ரேவதி உடனான திருமணத்திற்கு பிறகும் கூட வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த கார்த்திக் எப்போதும் அதே உடையில் தான் இருந்தார்.
சமீப காலமாக சீரியலில் நடக்கும் காட்சிகளை வைத்து ரசிகர்கள் பலரும் கார்த்திக்கிற்கு ஆதரவாக கமெண்ட்ஸ்களை விமர்சனங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வச்சிருந்தாங்க. ஆனால், இப்போது ஒரே ஒரு புரோமோவில் ஒட்டு மொத்த ரசிகர்களும் வாயடைத்து போய்ட்டாங்க. அந்தளவிற்கு கார்த்திக்கின் காட்சி மட்டுமின்றி அவரது காஸ்டியூமும் மாறிவிட்டது. அப்படி எப்படி ஒரே நாளில் காட்சி மாறியது என்று நீங்கள் கேட்கலாம்.
ஜீ 5 தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொன்ன பிறகு அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளாம். அவர் அவமானப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர்கள் அவருக்காக குரல் எழுப்பினர். கார்த்திக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்போதும் போன்று அமைதியாகவே இருந்தார். கார்த்திக் உண்மையை சொல்லவே கும்பாபிஷேகம் நின்றது. ரேவதியை பிரியும் நிலை வந்தது. வீட்டை விட்டும் துரத்தப்பட்டார். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டார்.
ஜீ 5 தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொன்ன பிறகு அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளாம். அவர் அவமானப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர்கள் அவருக்காக குரல் எழுப்பினர். கார்த்திக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்போதும் போன்று அமைதியாகவே இருந்தார். கார்த்திக் உண்மையை சொல்லவே கும்பாபிஷேகம் நின்றது. ரேவதியை பிரியும் நிலை வந்தது. வீட்டை விட்டும் துரத்தப்பட்டார். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டார்.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார். இதையடுத்து கார்த்திக் ரேவதியை சந்தித்து இனிமேல் இப்படி செய்யக் கூடாது என்று கண்டித்தார். மேலும், சத்தியமும் வாங்கி கொண்டார். சிகிச்சைக்கு பிறகு ரேவதி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் கார்த்திக்கிற்கு செங்கல் சூளை ஏலம் விடப்படுவது குறித்து தெரிந்து தனது மேனேஜரை ஏலம் எடுக்க சொல்லியிருக்கிறார்.
கார்த்திக் ஏற்கனவே சென்னையில் பிஸினஸ் செய்தவர். பல நிறுவனங்களுக்கு ஓனர். அப்படியிருக்கும் போது இது வெறும் செங்கல் சூளை தான். ஆதலால் அதை எடுக்காமல் விட்டுவிடுவாரா? சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு தெரியாமலே அவரும் மேனேஜரை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோவில் செங்கல் சூளை ஏலத்தின் ஆரம்ப விலை ரூ.50 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது.
அதன் பிறகு ரூ.55 லட்சம், ரூ.65 லட்சம், ரூ.85 லட்சம், ரூ.90 லட்சம், ரூ.95 லட்சம் என்று கேட்டுக்கொண்டே வர கடைசியாக ரூ.1 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்தார். அதைக்கேட்டு சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். மேலும், அந்த தொகையே கடைசியாக உறுதி செய்யப்பட்டது. நான் மேனேஜர் தான். எங்களுடைய பாஸ் இப்போது வருவார் என்று அவர் சொல்லவே ஆடி காரில் காரில் பேண்ட் சர்ட்டில் சும்மா கெத்தா, கம்பீரமாக வந்து இறங்குகிறார்.
அப்போது அஜித்தின் வீரம் ரத கஜ துராதி பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம் என்ற பாடல் ஒலிக்க செய்யப்படுகிறது. அதோடு புரோமோ வீடியோ முடிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த மாதிரி தான் நாங்கள் கார்த்திக்கை பார்க்க ஆசைப்பட்டோம். நாங்க எதிர்பார்த்தது இந்த மாஸ் கார்த்தியை தான், வந்துட்டாரா எங்க ஹீரோ, இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம், சாமுண்டீஸ்வரி சந்திரகலா ரியக்சன் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.