Siragadikka Aasai : ரோகிணியை நம்பி சிக்கலில் மாட்டிய மனோஜ்... முத்துவின் கையில் சிக்கிய முக்கிய ஆதாரம்!

Published : Aug 17, 2026, 07:54 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மனோஜும் ரோகிணியும் ஒன்றாக ஹோட்டலில் சந்தித்து பேசியதை வீடியோவாக ரெக்கார்டு செய்திருக்கிறார்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில், தற்போது ரோகிணியின் தில்லுமுல்லுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கிரிஷ் விஷயத்தில் மனோஜை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரோகிணி, அவரை நம்ப வைத்து தொடர்ந்து தனது திட்டத்தை நகர்த்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடில் எதிர்பாராத திருப்பம் அரங்கேறி உள்ளது.

ரோகிணியின் பேச்சை முழுமையாக நம்பி வரும் மனோஜ், அவர் சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார். கிரிஷுடன் பழக வேண்டும் என்ற ரோகிணியின் விருப்பத்திற்கும் மனோஜ் சம்மதிக்கிறார். இதையடுத்து கிரிஷையும் அழைத்துக்கொண்டு மனோஜ் ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் தொடங்குகின்றனர்.

Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?

24
ஹோட்டலில் முத்துவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அதே நேரத்தில், ஒரு பயணியை காரில் அழைத்துச் செல்லும் வேலையாக முத்து அந்த ஹோட்டல் பகுதிக்கு வருகிறார். அப்போது தற்செயலாக மனோஜ், ரோகிணி மற்றும் கிரிஷ் ஆகிய மூவரும் ஒன்றாக ஹோட்டலுக்குள் செல்வதை முத்து பார்த்துவிடுகிறார். மனோஜ் இவர்கள் இருவருடனும் இங்கே என்ன செய்கிறான் என்ற சந்தேகம் முத்துவுக்கு ஏற்படுகிறது. இதனால் அவர்களைப் பின்தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கிறார்.

உள்ளே சென்ற முத்துவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரோகிணி மற்றும் கிரிஷுடன் அமர்ந்து மனோஜ் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அவர் பார்க்கிறார். அதுமட்டுமின்றி, கிரிஷுக்கு மனோஜ் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பதையும் முத்து கவனிக்கிறார்.

ஏற்கனவே மனோஜின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்த முத்துவுக்கு இந்தக் காட்சி மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று நினைக்கும் அவர், நடந்ததை வீடியோவாக பதிவு செய்ய முடிவு செய்கிறார்.

34
வீடியோவுடன் வீட்டுக்கு செல்லும் முத்து

மனோஜ், ரோகிணி, கிரிஷ் மூவரும் ஒன்றாக இருந்த காட்சியை முத்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொள்கிறார். இதை வீட்டில் அனைவரிடமும் காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருக்கிறது. இதனால் ரோகிணி இதுவரை மறைத்து வைத்திருக்கும் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மறுபுறம், மனோஜின் நடவடிக்கைகள் குறித்து விஜயாவுக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. இதனால் மீனா மற்றும் ஸ்ருதியிடம் மனோஜை கண்காணிக்குமாறு விஜயா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

44
சிக்குவாரா மனோஜ்?

இந்நிலையில், முத்துவின் கையில் சிக்கியுள்ள வீடியோ மேலும் பிரச்சினையை பெரிதாக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் முத்து, மீனா, ஸ்ருதி ஆகியோரிடம் மனோஜ் சிக்கக்கூடிய நிலை இருக்க, மறுபுறம் கனகா மற்றும் அவரது அம்மா தொடர்பான விஷயங்களிலும் அவர் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகிறது.

ரோகிணியை நம்பி அவர் செய்து வரும் செயல்கள் அனைத்தும் தற்போது அவருக்கே எதிராக திரும்பும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக முத்து எடுத்திருக்கும் வீடியோ வீட்டில் காட்டப்பட்டால், மனோஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

ரோகிணியின் உண்மை வெளிவருமா? முத்துவின் வீடியோவால் மனோஜின் சீக்ரெட் உடையுமா? இந்த சிக்கலில் இருந்து மனோஜ் எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories