Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?

Published : Aug 15, 2026, 06:51 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் செயல்பாடுகள் மர்மமாக இருப்பதால் அதை கண்டுபிடிக்க விஜயா ஸ்மார்ட் ஆக பிளான் போட்டு இருக்கிறார்.

PREV
13
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மனோஜை சுற்றி அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்கள் கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனகாவின் அம்மா மனோஜை நேரில் அழைத்து ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்கிறார். தனது பெயரில் இருக்கும் சில சொத்துகளை மனோஜின் பெயருக்கு மாற்றி எழுத முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார். குறிப்பாக ஊட்டியில் இருக்கும் வீடு மற்றும் நிலம் உள்ளிட்ட சொத்துகளை மனோஜுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யப் போவதாகவும், அதற்காக ஆடிட்டரிடம் பேசிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

Siragadikka Aasai : சத்யாவுக்கு எம்.டி பதவி... கிரிஷின் கேள்விகளால் மயங்கி விழுந்த மனோஜ்..!

23
விஜயாவுக்கு வந்த டவுட்

சொத்துகள் தனது பெயருக்கு வரப்போகிறது என்ற தகவலை கேட்டதும் மனோஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் அவர் உற்சாகமடையும் நிலையில், மறுபுறம் வீட்டில் மனோஜ் மீது சந்தேகம் அதிகரிக்கிறது. மனோஜின் நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதாக விஜயாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் உண்மையை கண்டுபிடிக்க மீனா மற்றும் சுருதியிடம் மனோஜை கண்காணிக்குமாறு விஜயா கூறுகிறார். இதையடுத்து இருவரும் மனோஜின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகின்றனர்.

Siragadikka Aasai : முத்து, மீனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த மனோஜ்... கிரிஷ் உடன் வந்து பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி

33
மனோஜை கண்காணிக்கும் மீனா

இந்த விசாரணையின் போது மனோஜுக்கும் கனகாவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, மனோஜுக்கு ஏற்கனவே இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது என்ற விஷயம் தெரியவரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மனோஜின் சொத்து ஆசை ஒருபுறம், விஜயாவின் சந்தேகம் மறுபுறம் என கதை விறுவிறுப்பான கட்டத்தை எட்டுகிறது. ரோகிணி தொடர்பான உண்மை வெளியில் வந்தால் குடும்பத்தில் அடுத்ததாக என்ன மாதிரியான பிரச்சனை வெடிக்கும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு

Read more Photos on
click me!

Recommended Stories