முத்துவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட கிரீஷின் பாட்டி... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்

Published : Sep 20, 2025, 11:41 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா வீட்டில் இருந்த கிரீஷை அவரது பாட்டி லட்சுமி அழைத்துச் செல்ல வந்திருந்த நிலையில், அடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷை அழைத்து செல்ல வந்த அவரது பாட்டியிடம், தான் உங்களுடன் வரமாட்டேன் என அடம்பிடிக்கிறான் கிரீஷ். இதையடுத்து மீனாவும், முத்துவும், அவன் தான் வர விருப்பமில்லைனு சொல்றான்ல அப்புறம் ஏன் அவனை வறுபுறுத்துறீங்க. அவன் இங்கயே இருக்கட்டும் என சொல்கின்றனர். இதைக்கேட்டு டென்ஷன் ஆன லட்சுமி, கிரீஷ் உங்களோடு இருக்கக் கூடாது என அவனோட அம்மா ஸ்ட்ரிக்டா சொல்லிவிட்டால், அதனால் நான் அவனை அழைத்து செல்வேன் என உறுதியாக கூறுகிறார். எங்களோடு இருக்கக்கூடாதுன்னு ஏன் சொன்னார் என முத்து கேட்கிறார்.

24
மனமுடைந்து போகும் முத்து

அதற்கு லட்சுமி சொன்ன பதிலால் மனமுடைந்து போகிறார் முத்து. கிரீஷ் உங்களோடு இருந்தால், அவனும் முத்துவைப் போல் ரெளடி ஆகி விடுவான் என அவனுடைய அம்மா பயப்படுவதாக லட்சுமி கூறியதைக் கேட்டு முத்து கலங்கி நிற்கிறார். இதனால் டென்ஷன் ஆன மீனா, என்னங்க பேசுறீங்க நீங்க, உங்க பேரனை பெரிய பிரச்சனையில் இருந்து ஏன் புருஷன் தான் காப்பாற்றினார். அவனுக்காக கிரீஷ் அடிச்ச பையனோட காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். இதெல்லாம் கிரீஷ் நல்லா இருக்கனும்னு தான் அவர் செய்தார். அவரைப்போய் இப்படி சொல்வதற்கு உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு என கேட்கிறார் மீனா.

34
கிரீஷை அழைத்து செல்லும் பாட்டி

இதையடுத்து பேசும், முத்து, நீங்க ரெளடினு சொன்னது எனக்கு புது வார்த்தையெல்லாம் இல்ல. சின்ன வயசில் இருந்து கேட்டுக்கிட்டு தான் இருக்கேன். என் அம்மாவே என்னை அப்படி தான் சொல்வாங்க. சரி விடுங்க, அவனோட பாட்டி நீங்க, உங்க பேரன் உங்களோடு தான் வளர வேண்டும். உங்களோட அனுபவத்துல அவனை நல்லா வளர்ப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னையும் என்னோட பாட்டி தான் வளர்த்தாங்க. அவனுக்கு அம்மா பாசம் கிடைக்காவிட்டாலும் பாட்டி உங்களோட பாசமாவது கிடைக்கட்டும், நீங்க கிரீஷை கூட்டிட்டு போங்க என சொல்ல்கிறார் முத்து.

44
முத்துவின் ஆசை

கிரீஷின் பாட்டி அவனை அழைத்து சென்றதும், இது அவங்களா பேசவில்லை யாரோ பின்னாடி இருந்து அவங்கள பேச வைக்குறாங்க என சொல்கிறார் முத்து. மீனாவும் தனக்கு அந்த சந்தேகம் இருப்பதாக கூறுவதோடு, அது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார். பின்னர் காரை எடுத்துக் கொண்டு தன் நண்பர்களை சந்திக்க செல்லும் முத்து அவர்களிடம், தான் கிரீஷை தத்தெடுத்து வளர்க்க விரும்பியதாக கூறுகிறார். இப்படி கிரீஷை தன்னுடைய பையனாக வளர்க்க விரும்பிய முத்துவின் ஆசையில் தற்போது மண்ணை அள்ளிப் போட்டுள்ளார் லட்சுமி. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories