
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்னும் ஓரிரு நாட்களில் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது. இதில் கோமதியும் அவரது குடும்பமும் கண்டிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என்று காந்திமதி கண்டிஷன் போட்டுள்ளார். அப்போது தான் தான் பிறந்தநாள் விழாவிற்கு வருவேன் இல்லையென்றால் என்னுடைய ரூமை விட்டு வெளியில் கூட வரமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் தான் இன்றைய 613ஆவது எபிசோடில் பழனிவேல், கதிர் மற்றும் கோமதி ஆகியோர் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில், காந்திமதியின் பிறந்தநாள் கோயிலில் வைத்து நடப்பதால் நாம் எல்லோருமே சென்று கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அப்படியே அம்மாச்சி காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கிவிட்டு வரலாம் என்று கதிர் நல்ல யோசனை சொல்கிறார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பழனிவேலுவின் மனைவி சுகன்யா அங்கிருந்து மூச்சப்பிடிக்க ஓடி வந்து சக்திவேல் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டார். அதாவது, அத்தை பிறந்தநாளுக்கு கோமதி அத்தாச்சியும், அவரது குடும்பமும் வரப்போறங்களாம். இப்போது தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். உங்களது தம்பி சொன்னதையெல்லாம் கேட்டு அவர்கள் வருவதாக முடிவு செய்துள்ளார்கள்.
இதையெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த சக்திவேல் என்னுடைய உடம்பில் உயிர் இருக்கும் வரை இது நடக்காது, நடக்கவும் விடமாட்டேன் என்று ஆக்ரோஷமாக பேசினார். கதிரெல்லாம் ஒரு சில்லுண்டு பையன் ஓங்கி ஒரு அடி விட்டேனா ஒன்றை மயில் தூரத்துக்கு அங்கிட்டு போய் விழுவான். அரைவேங்காடு பையன் அவனெல்லாம் வீர வசனம் பேசுகிறானா என்று ஆக்ரோஷமானார். அவர்கள் என்னுடைய ஆத்தா பிறந்தநாளுக்கு வரக்கூடாது.
அவர்கள் கோயிலுக்கு தானே வருகிறார்கள். கோயில், சாமியெல்லாம் எல்லோருக்கும் பொது. அங்கு யார் வர வேண்டும், யாரு வரக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வரவில்லையே. நீங்கள் பிரச்சனை ஏதும் பண்ண வேண்டாம். அப்படி பிரச்சனை பண்ணினால், அவர்கள் அடிக்க வந்துவிட்டால் என்ன செய்வது. யாரும் யாரையும் அடிக்க கூடாது. கோமதி குடும்பமும் வரட்டுமே முத்து என்று காந்திமதி அமைதியாக பேசினார்.
ஒரு ஈ, காக்கா கூட வரக்கூடாது, அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன் – இளையவர் சக்திவேல் ஆவேஷம்!
ஆத்தா, அந்த வீட்டிலிருந்து ஒரு ஈ காக்கா கூட வரக் கூடாது, கோயிலினும் பார்க்க மாட்டேன், உன்னுடைய பிறந்தநாளுனும்னு பார்க்கமாட்டேன், என்ன செய்வது என்று எனக்கே தெரியாது என்று சக்திவேல் பேச, அதிர்ச்சி அடைந்த காந்திமதி அப்புறம் எதுக்கு இந்த கொண்டாட்டம். அது அடுத்தவர்கள் கூட கிடையாது. உன்னுடைய சொந்த ரத்தம். என்னுடைய ஆசைக்காக அவர்களுடைய குடும்பம் பிறந்தநாளுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது.
எல்லோரும் ஒன்றாக இருந்து என்னுடைய 75ஆவது பிறந்தநாளை கொண்டாடினால் சரி, இல்லையென்றால் இந்த வீட்டை விட்டு நான் கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று காந்திமதி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், மழை பெய்து ரோடு எல்லாம் சேதம். அதான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது என்று செந்தில் மீனாவிடம் சொல்ல, அவரும் அமைதியாக ஆட்டோவில் ஏற வீட்டிற்கு சென்றனர்.
மீனா வீட்டிற்கு வந்ததும், வீட்டில் டிவி, ஷோஃபா எல்லாமே இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா இதெல்லாம் ரூ.10 லட்சத்தில் வாங்கினது தானே என்று கேட்க, ஆமாம் என்றார். மேலும், அதில் மிஞ்சம் ஏதாவது இருக்கா, இல்லையா என்று ஆத்திரமாக கேட்க, அவரும் அந்தளவிற்கு முட்டாள் இல்ல நான். மீதி இருக்கு என்றார். நீ ஏன் என்னுடைய அம்மா வீட்டிற்கு போன, அப்படி போக வேண்டுமென்றால் உன்னுடைய அம்மா வீட்டிற்கு போக வேண்டியது தானே என்று கேட்க, எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாக இருந்தார். செந்தில் சாப்பாடு வாங்க சென்றுவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் அலைமோதும் காதல் லீலைகள் - பாருவுக்கும் ஆளு கிடைச்சாச்சு!
அந்த நேரம் பார்த்து கோமதி போன் போடவே, மீனா மற்றும் கோமதி இருவரும் அன்பாக பேசிக் கொண்டனர். மீனா சாப்பிடாமல் இருந்ததைக் கண்டு வருத்தப்பட்டார். ராஜீ கதிரை முழுசா மாத்திவிட்டாள். ராஜியின் முந்தானையை பிடித்துக் கொண்டு பின்னாடியே போறான். அந்தளவிற்கு மாறிவிட்டான் என்று கோமதி சொல்ல, ஆமாம் அத்தை அவர்கள் இருவரும் Made For Each Other என்றார். அதாவது, ராஜீக்காக பிறந்தவர் தான் கதிர், கதிருக்காக பிறந்தவர் தான் ராஜீ என்றார். கடைசியாக அத்தை உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று வருத்தமாக பேசினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.