மாமனார் உயிரை காப்பாற்றி பாட்டியை கோட்டைவிட்ட கார்த்திக்: என்ன நடந்தது?

Published : Nov 17, 2025, 08:27 PM IST

Karthik Save Rajarajan but Grandmother Parameshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மாமனாரை காப்பாற்றி பாட்டியின் உயிரை கார்த்திக் கோட்டைவிட்டுள்ளார்.

PREV
14
கார்த்திகை தீபம் 2 சீரியல்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் முகூர்த்தக்கால் நடப்பட்டு சாமி வேட்டைக்கு செல்லும் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், ராஜராஜன் தான் சாமியாடி வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று கோயில் பூசாரி சாமியாடி அருள்வாக்கு சொன்னார். இது காளியம்மாவின் திட்டம். அதன்படி தான் பூசாரியும் சாமியாடி அருள் வாக்கு சொன்னார்.

24
சாமியாடி வேட்டைக்கு சென்ற ராஜராஜன்

பிறகு ராஜராஜன் சாமியாடி வேட்டைக்கு செல்லும் வழியெங்கும் அவரை கொலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஊரைச் சுற்றிலும் 4 மூலையிலும் கார்த்திக் போலீசை நிறுத்த சிவனாண்டி சண்டையிட்டு போலீசை வேண்டாம் என்று சொல்ல ராஜராஜனை கார்த்திக்கே காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு மூலையிலும் சாமி விளக்கை ஏற்றும் போது ராஜராஜனை கொல்ல காளியமமாள் அடியாட்களை செட் செய்து வைத்திருந்தார்.

34
கார்த்திக் - ராஜராஜன்

ஆனால், கார்த்திக் ராஜராஜன் பின்னாடியே சென்று ரௌடிகளை அடித்து மாமனாரை காப்பாற்றினார். இது காளியம்மாளுக்கு தெரியவர, கும்பாபிஷேகத்தை நிறுத்த காளியம்மாள் புதிதாக ஒரு பிளான் போட்டார். அதாவது பரமேஸ்வரியை வரவழைத்து அவரை கத்தியால் குத்தினார். இதனால் வலியால் துடித்த அவருக்கு சாமியின் துண்டு பாதுகாப்பாக வந்தது.

44
பரமேஸ்வரி

இதைத் தொடர்ந்து பரமேஸ்வரி அப்படியே மெல்ல மெல்ல கோயிலுக்கு செல்லும் காட்சி இடம் பெற்றது. தன்னுடைய மாமனாரை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்ற கார்த்திக் தனது பாட்டியின் விஷயத்தில் கோட்டைவிட்டுள்ளார். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories