Karthik Revealed The Truth and Chamundeshwari Shock : கார்த்திகை தீபம் 2 சீரியலில் அப்பாவி பொதுமக்களை காப்பாற்றும் நோக்கத்தில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை தனது மாமியார் சாமுண்டீஸ்வரியிடம் கூறுகிறார்.
சாமுண்டீஸ்வரியில் பரம எதிரியான ராஜா சேதுபதியின் பேரன் தான் கார்த்திக் என்பது ரேவதி, சந்திரகலா, மயில்வாகனம், ராஜராஜன் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இவர்கள் தவிர குடும்பத்தில் உள்ள மற்ற யாருக்குமே கார்த்திக் யார் என்ற உண்மை தெரியாது. இந்த சூழலில் இப்போது கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த காளியம்மாள் கோயிலில் பாறைக்கு வைக்கும் வெடிகுண்டு வைத்துள்ளார். அதுவும் கார்த்திக்கின் மாமனாரான ராஜராஜன் கழுத்தில் போட்டிருக்கும் மாலையில் தான் அந்த வெடிகுண்டும் இருக்கிறது.
23
உண்மையை சொல்லும் கார்த்திக்
அதனை கண்டுபிடிக்க கார்த்திக் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கடைசியாக கார்த்திக்கின் கல்லூரியில் படித்த ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருக்கும் கவுசல்யாவின் உதவியை நாடினார். அவரும் பல வழிகளில் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவராலும் வெடிகுண்டு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் காளியம்மாள் போட்ட கண்டிஷன்படி கார்த்திக் தான் யார் என்ற உண்மையை தனது அத்தை சாமுண்டீஸ்வரியிடம் தெரியப்படுத்த முன் வந்துள்ளார்.
33
கார்த்திகை தீபம் 2 சீரியல் புரோமோ
இது தொடர்பான புரோமோ வீடியோவில் என்னை மன்னித்துவிடுங்கள் அத்தை. ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் நான் தான் என்று சொல்வது போன்றும், அதனை கேட்ட சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இது கனவா அல்லது நினைவா அல்லது அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்த்து ரசிக்கலாம்.