நின்ற இடத்திலேயே இருந்து திருடனை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரியின் மூளையோ மூளை!

Published : Nov 29, 2025, 06:57 PM IST

Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் நின்ற இடத்திலேயே திருடன் யார் என்பதை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரியான கவுசல்யா அவரிடமிருந்து தாலியை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

PREV
15
கார்த்திகை தீபம் 2 சீரியல்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் அங்கு நடக்கும் சம்பவங்கள் பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. எப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? பொதுவாக திருடனை பிடிக்க போலீஸ் சிசிடிவி கேமராவைத் தான் முதலில் பரிசோதனை செய்வார்கள். ஆனால், இங்கு ஐபிஎஸ் அதிகாரியான கவுசல்யா நின்ன இடத்திலேயே இருந்து திருடனை கண்டுபிடித்துள்ளார். அது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
கும்பாபிஷேகம்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் கும்பாபிஷேகம் நடத்த போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால், காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நிறுத்த கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளனர். அதனை கண்டுபிக்க கார்த்திக் பல வழிகளில் முயற்சித்து பலனில்லை. கடைசியாக கார்த்திக் படித்த கல்லூரியில் படித்த கவுசல்யா கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்துள்ளார்.

35
ரேவதியை காப்பாற்றிய கவுசல்யா

அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. கோயிலில் ரேவதி கடத்துவதை பார்த்து அவரை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியிடம் பேசும் போது தான் யார் என்பதையும், கார்த்திக் யார் என்ற உண்மையையும் சொல்ல வரும் போது ரேவதி அவருக்கு சிக்னல் கொடுத்து தடுத்து நிறுத்தினார். இதைத் தொடர்ந்து தான் பரமேஸ்வரியிடம் ஒருவர் தனது தாலியை காணோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த கவுசல்யா என்ன ஆச்சி ஏது ஆச்சு என்று கேட்டு, அந்த பெண்ணின் தாலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

45
திருடனை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி

அப்போது சுற்றி சுற்றி பார்த்தார். மேலும், அந்த பெண்ணின் கழுத்தில் பெயிண்ட் ஏதோ ஒட்டியிருந்ததையும், ஐஸ் வண்டிக்காரரின் கையில் பெயிண்ட் இருந்ததையும் பார்த்து அவரை அடித்து உதைத்து தாலியை அவரிடமிருந்து பெற்று அந்த பெண்ணிடம் ஒப்படைந்தார். அதன் பின்னர் கவுசல்யாவிற்கு போன் போட்ட கார்த்திக் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் உண்மையை சொன்னார். இதைத் தொடர்ந்து கவுசல்யா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட வெடிகுண்டு இருக்கும் இடத்தை நெருங்கிய போது இல்லை இல்லை அங்கு இருக்காது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பின் வாங்கினார்.

55
மாமியாரிடம் உண்மையை சொல்ல முடிவு செய்த கார்த்திக்

கடைசியாக கோயிலுக்கு வந்த கார்த்திக், வேறு வழியில்லாமல் தான் யார் என்ற உண்மையை தனது மாமியார் சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல இருப்பதாக கூறினார். ரேவதி, மயில்வாகனம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் சொல்லியும் கார்த்திக் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. உண்மையை சொல்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறி இந்த முடிவை எடுத்துள்ளார். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இன்றைய எபிசோடை பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories