Karthigai Deepam Serial Spoiler and Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் 1147ஆவது எபிசோடில் சந்திரகலா மற்றும் சிவனாண்டிக்கு எதிராக எல்லா ஆதாரங்களையும் கார்த்திக் திரட்டியுள்ளார்.
Chandrakala exposed in Karthigai Deepam Season 2, கார்த்திகை தீபம் சீசன் 2 சந்திரகலா அம்பலம்
சந்திரகலா தனது கணவர் சிவனாண்டி மற்றும் மாமனார் முத்துவேல் ஆகியோருடன் இப்போது கார்த்திக் கையில் வசமாக சிக்கியுள்ளார். கோயில் புதையல் நகைகளை திருடினால் சும்மா இருக்க முடியுமா? பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கமா என்று கேட்கும் அளவிற்கும் திருடுனது எல்லாம் சந்திரலகா ஆனால் சிக்கியது என்னவோ கார்த்திக் மற்றும் அவரது மனைவி ரேவதி தான்.
25
Karthigai Deepam Serial Spoiler and Highlights, கார்த்திகை தீபம் ஸ்பாய்லர் மற்றும் சிறப்பம்சங்கள்
கார்த்திகை தீபம் சீரியலில் அம்மாவிடம் சபதம் போட்டு வீட்டிற்கு வெளியிலேயே இருக்கும் தனது மனைவிக்காக உண்மையில் கோயில் நகைகளை திருடியது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் கார்த்திக் ஈடுபட்ட போது திட்டம் போட்டு முதலில் சந்திரகலா தான் நகையை திருடியது வெளிச்சத்திற்கு வந்தது. கோயில் நகையை சந்திரகலா தான் திருடியிருக்கிறார் என்பதற்கான வீடியோ ஆதாரத்தை கார்த்திக் முதலில் திரட்டினார்.
35
Karthik Raj and Reshma Pasupuleti clash, கார்த்திக் ராஜ் மற்றும் ரேஷ்மா மோதல்
பிறகு அவரை வைத்தே சிவனாண்டி மற்றும் முத்துவேலுவை சிக்க வைத்தார். நகையை மறைக்க பயன்படுத்தப்பட்ட சண்முகப்பாண்டியனின் மனைவியிடமிருந்து 100 சவரன் நகையை மீட்டு வந்த சந்திரகலா அதனை தனது கணவரின் கடனை அடைக்க அவரிடம் பாதியை கொடுத்தார். சிவனாண்டியும் இது போலியான நகை என்று தெரியாமல் சேட்டிடம் விற்க சென்றார்.
Chamundeshwari reaction to Chandrakala's truth, சந்திரகலாவின் உண்மையைக் கேட்ட சாமுண்டீஸ்வரி
கார்த்திக்கின் ஐடியாவின் படி அந்த சேட் அவர்களிடமிருந்து நகையை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக பணம் கொடுத்து அனுப்பினார். இப்போது சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகிய மூவரும் தான் கோயில் நகையை திருடி அதனை கார்த்திக்கின் அம்மா அபிராமி நாச்சியார் சிலை இருக்கும் இடத்தில் மறைத்து வைத்தனர் என்பது அம்பலமானது. இப்போது கார்த்திக் தனது கையில் எல்லா ஆதாரங்களையும் வைத்திருக்கும் நிலையில் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
55
Karthigai Deepam Serial Revathi and Karthik plan, ரேவதி மற்றும் கார்த்திக் திட்டம்
நகை திருட்டு நாடகம்: கோவில் நகைகளை அபகரிக்க சந்திரகலா போட்ட திட்டம் அவருக்கே வினையாக முடிந்துள்ளது. ஒரு பெண்ணிடம் ரகசியமாக நகை வாங்கும் காட்சியை கார்த்திக் வீடியோ எடுத்துள்ளார்.
கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்: ரவுடி சண்முகத்தின் மனைவியிடம் நகையை கேட்டு சந்திரகலா மிரட்டும் போது, அதை மறைந்திருந்து ஆதாரத்துடன் கார்த்திக் பதிவு செய்துள்ளார்.
குடும்பத்தின் நிலை: இதுவரை சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி வந்த சந்திரகலா, இப்போது கார்த்திக்கின் இந்த வீடியோ ஆதாரத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் தலைகுனியப் போகிறார்.
அடுத்தகட்ட ஆட்டம்: இந்த ஆதாரத்தை வைத்து கார்த்திக் தனது சின்ன அத்தையான சந்திரகலாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா அல்லது அவரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாரா என்பதே இனி வரும் எபிசோடுகளின் சுவாரஸ்யம்.