Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் வடநாட்டு கம்பெனி மீட்டிங்கில் வந்து கார்த்திக் எல்லாம் வரமாட்டான் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கார்த்திக் மாஸாக தீபாவுடன் என்ட்ரி கொடுக்கிறான். பிறகு கார்த்திக் பல்லவி எனக்காக தான் பாடி இருக்காங்க என்று சொல்ல சிதம்பரம் அது எப்படி பாடுவார் அவர் எனக்காக பாடி கொடுத்திருக்கா என்று சொல்ல கார்த்திக் இல்ல எனக்காக தான் பாடி இருக்கா என்று பாடலை எடுத்துக்காட்ட சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார்.
zee tamil Karthigai deepam serial
உடனே சிதம்பரம் இது என்னுடைய பாடல் என்னிடமும் இருக்கு என்று சொல்லி வாக்குவாதம் செய்ய சரி எடுத்துக்காட்டுங்க என்று எல்லோரும் கேட்க சிதம்பரமும் பாட்டை ப்ளே செய்ய காமெடி பாடல்களாக ஓடுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சி அடையும் சிதம்பரம் அவமானப்பட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். சவுண்ட் இன்ஜினியரிடம் வேறு காப்பி இருக்கா என்று கேட்க நீங்க தானே சார் ஒரிஜினல் காப்பிய தவிர வேற எதுவும் இருக்க கூடாதுன்னு டெலிட் பண்ண சொல்லிட்டீங்க என்று சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் குவிந்த வாக்குகள்... பிக்பாஸ் ஓட்டிங்கில் திடீர் டுவிஸ்ட் - டைட்டிலை தட்டிதுக்கப்போவது இவரா?
Karthigai deepam serial Update
அதன் பிறகு கார்த்திக் வெளியே வர எப்படிடா இதெல்லாம் நான் கெட்டவன் எந்த எல்லைக்கும் போலாம் நீ நல்லவன் நீ எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க நீங்க பண்ணும் போது நான் கொஞ்சம் பண்ண கூடாதா என கார்த்தி பதிலடி கொடுக்கிறான். அதன் பிறகு சிதம்பரம் பல்லவி வேணா உனக்கு பாடி கொடுத்திருக்கலாம் ஆனால் பல்லவி உன் பக்கத்திலேயே வந்து நின்னா கூட உன்னால கண்டுபிடிக்க முடியாது, அவள நான் பார்த்திருக்கேன் என்று சொல்ல தீபா அதிர்ச்சி அடைகிறாள்.
உடனே கார்த்திக் இன்னும் 12 நாளில் பல்லவி யார் என்பதை கண்டுபிடித்து உங்க நேரில் நிறுத்துகிறேன் என்று சொல்ல சிதம்பரம் உன்னால முடியாது அப்படியே அது முடிஞ்சாலும் உனக்கு தான் தர்ம சங்கடம் என சொல்கிறார். கார்த்தியின் சவாலால் தீபா அதிர்ச்சி அடைகிறாள்.