Chamundeswari Gun Point Karthik Scene : புதையல் நகைகளில் ஒரு சில முத்துக்கள் மட்டும் சிதறி கிடந்ததை கண்டுபிடித்த கார்த்திக் தனது மனைவியை சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்தாரா இல்லையா என்பது பற்றி பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியலில் 1139ஆவது எபிசோடில் கார்த்திக் மீது இருந்த உச்சகட்ட கோபத்தின் காரணமாக தனது மகளின் கணவர் என்று கூட பார்க்காமல் சாமுண்டீஸ்வரி அவரை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது ரோகிணி, மயில்வாகனம், ராஜராஜன் ஆகியோர் தடுத்து நிறுத்தவே இப்போது இவர்கள் சொல்வதை கேட்டு நான் திரும்ப செல்கிறேன் என்று கூறிவிட்டு சாமுண்டீஸ்வரி திரும்ப சென்றார். என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
Karthik Exposes Chandrakala in Jewel Theft
கார்த்திகை தீபம் சீரியலில் கோயிலில் கிடைத்த புதையல் நகைகளை சாமுண்டீஸ்வரி தனது வீட்டிற்கு எடுத்து செல்ல சந்திரகலா யாரும் இல்லாத நேரத்தில் திருடிச் சென்றார். மேலும், கார்த்திக் திருடியதாக அவர் மீது வீண் பழி சுமத்தினார். எங்கு கார்த்திக் சிறைக்கு சென்றால் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்த ரேவதி நகையை திருடியது நான் தான் என்று ஒப்புக் கொண்டு சிறைக்கு சென்றார்.
35
Karthigai Deepam Missing Jewelry Found Update
இதைத் தொடர்ந்து கார்த்திக் உண்மையை கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்கினார். இதற்கிடையில் அக்காவை மேலும் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக சந்திரகலா, எல்லா பேப்பரிலும் அக்காவைப் பற்றி வந்த செய்திகளை எடுத்துக் கொண்டு சாமுண்டீஸ்வரியை மேலும் வெறுப்பேற்றினார். இதற்கெல்லாம் அவன் தான் காரணம் என்று கார்த்திக்கை கொல்லவும் முயற்சி செய்ய ரோகிணி, ராஜராஜன் உள்பட அனைவரும் தடுத்து நிறுத்தினர்.
45
Karthigai Deepam Serial Today Episode March 2026
அதன் பின்னர் மன வேதனை அடைந்த கார்த்திக் தனது அம்மாவின் சிலை இருக்கும் இடத்திற்கு சென்று சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அப்போது, கோயில் நகைகளில் ஒரு சில முத்துக்கள் மட்டும் சிதறிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து கொள்ளும் மருத்துவ உபகரணங்களும் இருந்தன.
55
Chamundeswari Gun Point Karthik Scene
அதை எடுத்து கொண்டு புறப்பட்டு செல்வது போன்ற காட்சிகளுடன் 1139ஆவது எபிசோடு முடிந்தன. அடுத்து 1140ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், அதில், நகைகளை புதைத்து வைத்தது யார் என்று கண்டுபிடித்து புதையல் நகைகளை மீட்டாரா? ரேவதியை சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்தாரா? என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.