"செல்லமே செல்லமே விக்ரம் யார் தெரியுமா? நடிகர் ஜிஷ்ணுவின் நிஜ வாழ்க்கையும்.. அவர் கடந்து வந்த பாதையும்!"

Published : Mar 06, 2026, 03:58 PM IST

Jishnu Kurichiyath biography Real Life career in Tamil: செல்லமே செல்லமே சீரியலில் கதாநாயகனாக வரும் விக்ரம் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இவரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Chellame Chellame Serial Hero Vikram Real Name

ஜிஷ்ணு மேனன் கேரளாவைச் சேர்ந்த பாலக்காடு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு மாடலாகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். பிறந்தது கேரளா தான் ஆனால் இவர் வளர்த்தது அறிமுகமானது அனைத்தும் தமிழ் சினிமாவில் தான். இவர் முதன்முதலாக சன் டிவியில் ஒளிபரப்பாகிய சுந்தரி நாடகத்தின் மூலமே வில்லனாக அறிமுகமாகி அனைவரும் மனதிலும் நீங்க அதை இடத்தை பிடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் கார்த்திக் என்னும் பெயரில் இருக்கும். இவரது நடிப்பு திறமையும் அழகும் திறமையும் உருவமும் இல்லத்தரசிகளுக்கு மனதில் நீங்காத இடத்தை பெற்றிருந்தார். இந்த சீரியல் முலமே ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலம் ஆகி வந்தார்.

25
ஜிஷ்ணு மேனனின் கனவுகள்:

விஷ்ணு தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஆடை அலங்காரத்தில் அதிக ஆர்வம் இருந்ததால் அந்த படிப்பினை தேர்வு செய்து படித்தார். அவருக்கு ஆண் மாடலாக வேண்டும் என்று நிறைய கனவுகள் இருந்தது. அதனால் கேரளாவில் அவர் ஆண் மாடல் வேலையில் பணியாற்றினார். நிறைய காம்படிஷனில் ஆண் மாடலாக இவர் கலந்து கொள்வார். இவருக்கு உலக அளவில் ஆண் மாடலாக வேண்டும் என்று கனவு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு இவர் 2012 இல் சென்னைக்கு வருகிறார். இவர்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.சினிமா வாய்ப்புகளை தேடுகிறார். அதிக அளவில் போட்டிகளில் இவர் கலந்து கொள்கிறார். 

35
Arnav Serials List Sun TV

ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும் பொழுதே இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் வில்லனாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு கார்த்திக் என்றும் கதாபாத்திரத்தில் இவர் தமிழ் சீரியலில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பை இவர் தன்வசம் வைத்துக் கொள்கிறார் இடத்தை வாய்ப்புக்கு இவர் தனது மனது அளவிலும் உடலளவிலும் தயார்படுத்திக்கொள்கிறார். இப்போ கொடுக்கப்படும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பார். சுந்தரி சீரியலில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

45
மலையாள திரையுலகம்:

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கேரளா தான். தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றதோ, அதே அளவிற்கு கேரளாவிலும் இருக்கின்றனர் ஏனென்றால் இவர் கேரளாவிலும் சில சீரியல்கள் நடித்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் ஜிஷ்ணு மேனன் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். இருவரும் குடும்பத்திற்கும் இவர்களது காதலை எடுத்துச் சொல்லி குடும்பத்தார் முன்னணியில் சம்மதம் பெற்றனர்

55
Jishnu Kurichiyath

இந்த நிலையில், நடிகர் ஜிஷ்ணு மேனன் அபியாத்ராவுக்கு கேரளாவில் கோயிலில் உற்றார் உறவினர் முன்னிலையில் எளிமையான முறையில் 2025 மே மாதம் திருமணம் நடைபெற்றது. ஜிஷ்ணு மேனன் நடித்த சீரியல்கள்: சுந்தரி :சன் டிவியில் கார்த்திக் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். ரோஜா - 2:சன் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வாணத்தில் நீ வெண்ணிலா என்னும் சீரியலில் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் இவர் திரைப்படங்களும் நடித்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு தமிழ் படமான வார்ட் 126 படத்தில் இவர் நடித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த கார்கில் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஜிஷ்ணுமேனன் டிவியில் இரவு 6. 30 மணிக்கு ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியலில் ஹீரோவாக நடத்தி வருகிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories