கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!

Published : Feb 22, 2026, 10:03 PM IST

Karthik Exposes Astrologer Drama and Rohini Abortion Twist: கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் கூறிய நிலையில், சாமுண்டீஸ்வரியை போட்டுத் தள்ள சிவனாண்டி போட்ட பிளான் ஒர்க் அவுட்டாகியுள்ளது.

PREV
18
Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. ரோகிணி மற்றும் ரேவதி இருவரும் மருத்துவமனையில் பேசிக் கொண்டிருந்ததை சந்திரகலா கேட்டுவிட்டார். இதை தொடர்ந்து சாமூண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்லி அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவரும், ரோகிணி கர்ப்பமாக இருக்கும் உண்மையை தெரிந்து கொண்டார். பின்னர், வீட்டிற்கு வந்த ரோகிணியிடம் இதைப் பற்றி விசாரிக்க, குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.

28
கார்த்திகை தீபம் சீரியல்

அப்போது தான் கார்த்திக் ஒரு ஐடியாவை சொல்ல, அந்த ஐடியாவின்படி ஜோதிடரை வீட்டிற்கு வர வழைத்து ரோகிணியின் ஜாதகத்தை பார்த்தனர். அதில், வந்த ஜோதிடரும், ரோகிணிக்கு மட்டும் குழந்தை பிறந்தால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்று குண்டை தூக்கி போட்டார். அவர் அப்படி சொல்ல சிவனாண்டி தான் முக்கிய காரணம். ஏனென்றால் ஜோதிடரின் குடும்பத்தினரை கடத்தி வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்தார். அதனடிப்படையில் ஜோதிடரும் அப்படியொரு பொய்யை சொன்னார்.

38
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

இதைக் கேட்டு ரோகிணி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜோதிடர் சொன்னதை நம்ப முடியாத கார்த்திக் நேராக அவரது வீட்டிற்கு சென்று உண்மையை கேட்டார். ஆனால், ஜோதிடரோ தனது மனசாட்சி படியே அப்படி சொன்னதாக கூறவே, கார்த்திக் ஒன்றும் செய்ய முடியாமல் அங்கிருந்து புறப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்த் மயில்வாகனம் ஹோட்டல் பிஸினஸ் தொடங்க, வங்கி லோனுக்கு முயற்சி செய்த நிலையில், வங்கி மேனேஜரிடம் சென்று கேட்டனர்.

48
Karthigai Deepam today Episode

அவர், கண்டிப்பாக ஒரு நாளில் பணம் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஹோட்டலுக்கு தேவையான சாமான்கள் வாங்க சென்றனர். அதில் சேர், டேபிள், வாளி, தட்டு என்று எல்லாவற்றையும் வாங்க சென்றனர். இதையெல்லாம் பார்த்த பிறகு ரோகிணிக்கு குழந்தையின் புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்து, ஹோட்டல் பிஸினஸ் தொடங்குவது பற்றி குடும்பத்தினரிடம் பேசினார்.

58
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

இதற்கிடையில், ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்பதை நிரூபிக்கும் வகையில், சாமூண்டீஸ்வரி காரில் சென்று கொண்டிருந்த போது அவரை காரை ஏற்றி கொல்ல சிவனாண்டி முயற்சி செய்தார். இது அவரை பயமுறுத்தவே சிவனாண்டி பண்ண பிளான். இருந்த போதிலும் அந்த காரில் சென்ற சந்திரகலாவிற்கு எதுவும் ஆகாத போது சாமுண்டீஸ்வரி லேசான காயத்தோடு உயிர் தப்பினார்.

68
கார்த்திக்

இதைத் தொடர்ந்து தலையில் கட்டு போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரியை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, சந்திரகலா தனது நாடகத்தை அரங்கேற்றினார். அதில், உன்னுடைய குழந்தையின் ராசி தான் அக்காவிற்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டது அப்படி இப்படி என்று டிராமாவை அரங்கேற்றினார்.

78
Karthigai Deepam Serial Promo

இதனால் மன வேதனை அடைந்த ரோகிணி தனக்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து மருத்துவமனைக்கு சென்றார். இது ஒரு புறம் இருக்க, சந்திரகலா, சாமுண்டீஸ்வரி, கார்த்திக், ரேவதி, ராஜராஜன் என்று எல்லோரும் சேர்ந்து ஜோதிடரின் வீட்டிற்கு புறப்பட்டு வந்தனர். அப்போது ஒருவரிடம் ரோகிணியின் ஜாதகத்தை கொடுத்து இந்த ஜாதகருக்கு குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை பார்த்து சொல்ல சொல்லுங்க என்று சொல்லிவிட்டு, அவர்கள் வெளியில் நின்று மறைந்து கொண்டு பார்த்தனர்.

88
Zee Tamil Serial Updates

அந்த ஜோதிடரோ, குழந்தை பிறந்தால் குடும்பத்தினருக்கு ஆயுள் பலம் என்றார். இதைக் கேட்டு அனைவரும் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், ஏன் அந்த ஜோதிடர் அப்படி சொன்னார் என்று அதிர்ச்சியும் அடைந்தனர். உண்மையில் ரோகிணி குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தாரா? இல்லை அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories