Karthigai Deepam Serial: பிரபல நடிகையின் என்ட்ரியால் தற்போது கார்த்திக்குக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடிக்க போவது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil Serial) விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று, கார்த்திகை தீபம். தற்போது ரேவதியின் திருமண காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், நேற்றைய எபிசோடில் கார்த்திக், மகேஷுக்கு பதில் பாட்டி கையால் துணி வாங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பதை பார்க்கலாம்.
25
சுவாதியின் பாடலை கேட்டு அனைவரும் பாராட்டும் காட்சி:
சுவாதி ரேவதி திருமணத்தின், பாட்டு கச்சேரியில் பாட வேண்டும் என ஆசை பட்ட நிலையில், எப்படியோ சாமுண்டீஸ்வரியிடம் சம்மதம் வாங்கி, சுவாதியின் ஆசையை ரேவதி நிறைவேற்றுகிறாள். சுவாதியும் நல்லபடியாக பாடி முடிக்க, அனைவரும் அவளின் பாடும் திறமையை கண்டு பாராட்டுகிறார்கள்.
கார்த்திக்கு நியூ என்ட்ரியால் வரும் புது பிரச்சனை:
இதை தொடர்ந்து கார்த்தி சற்றும் எதிர்பாராத பிரச்சனை, சாமுண்டீஸ்வரியின் தோழியாக ரூபத்தில் வருகிறது. சாமுண்டீஸ்வரியின் தோழி ராஜேஸ்வரி என்ற பெயரில், 'கார்த்திகை தீபம்' சீரியலில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். திருமணத்திற்கு வந்த தோழியை வரவேற்ற சாமுண்டீஸ்வரி தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் தோழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்.
45
ராஜேஸ்வரிக்குக்கு வந்த சந்தேகம் உறுதியானது:
அப்போது கார்த்தியை ட்ரைவர் என சாமுண்டீஸ்வரி அறிமுகம் செய்து வைக்க, ராஜேஸ்வரிக்கு கார்த்தியை எங்கேயோ பார்த்தது போல் தோன்றுகிறது. பின்னர் கார்த்தியை மீட்டிங் ஒன்றில் சந்தித்த நியாபகம் ராஜேஸ்வரிக்கு வர, இது பற்றி சாமுண்டீஸ்வரியிடம் பேச நினைக்கிறார்.
அதே போல் கார்த்தி பற்றி பி.ஏ-விடம் விசாரிக்க அவனும், கார்த்திக் ஒரு பிசினஸ் மேன் என்பதை உறுதி செய்ய, இதுபற்றி சாமுண்டீஸ்வரியிடம் பேச ராஜேஸ்வரி செல்கிறார்.
இந்த நேரம் பார்த்து மகேஷ் ரேவதியுடன் சேர்ந்து நடனமாட போவதாக மாயாவிடம் சொல்ல, இது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரிய வருகிறது. பாட்டி என் பேத்தி கூட நீ டான்ஸ் ஆடணுமா? என முணுமுணுத்து கொண்டே, ஏதோ ஒரு இலையை பறித்து வந்து மகேஷ் சட்டையில் தேய்க்க சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கார்த்தி பற்றிய உண்மை ராஜேஸ்வரி மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருமா? பாட்டியின் திட்டத்தால் மகேஷ்க்கு நடக்க போவது என்ன? என்பது பற்றி அறிய தொடர்ந்து 'கார்த்திகை தீபம்' சீரியலை தொடர்ந்து பாருங்கள்.