துண்ட காணோம், துணிய காணோம் என்று தெரிச்சு ஓடிய வில்லன்ஸ்- அசால்ட்டா ரிவெஞ்ச் எடுத்த கார்த்திக்!

Published : Dec 08, 2025, 05:42 PM IST

Karthigai Deepam 2 Serial Today 1056 Episode Promo Video : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியான நிலையில் அதில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

PREV
14
ஜெயிலிலிருந்து வெளியில் வந்த காளியம்மாள், சிவனாண்டி

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் எல்லா உண்மைகளையும் சொன்ன பிறகு வெளியேற்றப்பட்டார். பொய் சொன்ன போது மாமியார் வீட்டில் இருந்த போது உண்மையை சொல்லவே வீட்டை விட்டு விரட்டப்பட்டார். என்றாலும் கூட மாமியார் சாமுண்டீஸ்வரி குடும்பத்திற்கு ரௌடிகளால் பாதிப்பு ஏற்பட்ட போது ஓடி வந்து அவர்களை அடித்து துவைத்து மாமியாரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்றினார்.

24
வெடிகுண்டு வைத்த கார்த்திக்

இது ஒரு புறம் இருக்க, ஜெயில் டூரிஸ்ட் பிளேஸ் மாதிரி காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று வந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு வைத்ததாக இந்த மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஓரிரு நாட்களிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு காரணம் நான் தான் கோயிலுக்கு வெடிகுண்டு வைத்தேன் என்று சொல்லி ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

34
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோட்

இந்த நிலையில் தான் இன்றைய 1056ஆவது எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியில் வந்த சிவனாண்டி, முத்துவேல் மற்றும் காளியம்மாள் ஆகியோர் சாமுண்டீஸ்வரியையும், கார்த்திக்கையும் பழி தீர்க்க பிளான் போட்டனர். இதைப் பற்றி கார்த்திக்கிடம் சொல்லவே அவர் பதிலுக்கு ரிவெஞ்ச் எடுத்தார். எங்களை உள்ளே தள்ளினால் வெளியில் வர முடியாதா? எப்படி கில்லி மாதிரி வெளியில் வந்தோம் பார்த்தாயா? டேய் தம்பி இனிமேல் நீ நிம்மதியாகவே இருக்க முடியாது. நாங்கள் அடிக்கும் அடியில் நீ இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போறயா இல்லையா என்று பார் என்று சிவனாண்டி வீர வசனம் பேசுகிறார்.

44
கார்த்திகை தீபம் 2 சீரியல்

அதற்கு கார்த்திக்கோ, கூலாக இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும், யார் காணாமல் போக போறாங்க என்று சொல்லி போனை கட் செய்தார். அதன் பிறகு மூவரும் சைலண்டான நிலையில் பாம் சவுண்ட் கேட்டது. இதைத் தொடர்ந்து பெட்ரூமுக்குள் சென்று பார்த்த போது அங்கு பாம் வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். அப்புறம் என்ன பாம் வெடிக்க வீடே அலறியது. வீட்டின் ஒரு சில பகுதிகள் சேதமடைந்தன. அதோடு புரோமோ வீடியோ முடியவே அடுத்த என்ன நடக்கிறது என்று கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடை பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories