எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு பழசை எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி வரும் ஜனனி, ஜீவானந்தம் பற்றி அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதால், தன் மகன் தர்ஷனுக்கு திருமணம் ஆனது கூட தெரியாமல் இருந்தார். இதனிடையே சில நாட்களுக்கு முன் பார்கவி உடன் தர்ஷன் சண்டைபோட்டதை பார்த்து சந்தேகப்பட்ட ஈஸ்வரி, அவர்கள் இருவருக்கும் இடையே என்ன இருக்கு என விசாரணையில் இறங்கினார். அப்போது தான் தர்ஷனும், பார்கவியும் கணவன், மனைவி என்கிற உண்மை ஈஸ்வரிக்கு தெரியவந்தது. அவர்களின் திருமண உறவுக்கு அறிவுக்கரசி முட்டுக்கட்டையாக இருப்பதை அறிந்த ஈஸ்வரி, அவரை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
சாபம் விட்ட அறிவுக்கரசி
அறிவுக்கரசி வீட்டில் இருந்தால், தான் ஈஸ்வரியை அடித்து கோமா நிலைக்கு தள்ளிய விஷயத்தை உளறிவிடுவாள் என்கிற பயத்தில் ஆதி குணசேகரனும் நேக்காக பிளான் போட்டு தன் தம்பி கதிரிடம் சொல்லி அவரை உடனடியாக வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அறிவுக்கரசி, இத்தனை நாள் இந்த கதிருக்காக தான் இந்த வீட்டில் இருந்தேன். இன்னைக்கு அவனே என்னைய துரத்திட்டான்ல, உங்க மொத்த குடும்பத்தையும் அழிக்காம விடமாட்டேன் என்று சாபம் விட்டுள்ளார். இதனால் குணசேகரன் ஃபேமிலியே மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது.
35
ஜனனிக்கு வந்த டவுட்
வீட்டில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது நீங்க ரெண்டு பேருமே பழைய நிலைமைக்கு வந்துட்டீங்களானு எனக்கு பயமா இருக்கு என சொல்கிறார். அதைக்கேட்ட நந்தினி, அப்படியெல்லாம் இல்ல ஜனனி என சொல்கிறார். ஈஸ்வரி அக்கா எல்லாத்தையும் மறந்துட்டாங்க என்பதற்காக நாமளும் எல்லாத்தையும் மறந்துவிடலாமா. இவங்க செஞ்ச துரோகத்தை எல்லாம் அப்படியே விட்டுவிட முடியுமா, இவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காம விடக்கூடாதுக்கா என்று ஆக்ரோஷமாக பேசுகிறார்.
பின்னர் ஈஸ்வரி இவர்களை கிச்சனுக்குள் அழைத்து பேசுகிறார். இந்த மாற்றம் நல்லா தான் இருக்கு. சில முக்கியமான விஷயங்களை இரண்டு நாட்கள் கழித்து நானே சொல்கிறேன் என கூறுகிறார். அப்போது அவரிடம் பேசும் ஜனனி, உங்களுக்கு நடந்த சின்ன சின்ன விஷயம் எல்லாமே மறந்துபோச்சா என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி ஆமாம் என சொல்ல, உடனே ஜனனி, ஜீவானந்தம் சாரை ஞாபகம் இருக்கா? இல்லை மறந்திருச்சா? என கேட்கிறார். ஜீவானந்தம் பெயரைக் கேட்டதும் ஈஸ்வரி பேரதிர்ச்சி அடைகிறார். அவர் தனக்கு செய்த உதவிகளை எல்லாம் ஈஸ்வரி மறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
55
அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி
ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலன், அவர்கள் காதலிப்பது தெரிந்து தான் ஈஸ்வரியின் தந்தை அவரை குணசேகரனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். ஜீவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரிக்கு உதவி செய்திருந்தார். அப்போது ஆதி குணசேகரனின் ஆட்கள் ஜீவானந்தத்தின் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டனர். தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைத்ததே ஜீவானந்தம் தான். இந்த விஷயங்கள் எல்லாம் ஈஸ்வரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் ஜனனி மீண்டும் சொல்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.