சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கக் கூடாது என்பதற்காக அவரின் போஸ்டரை கிழித்துள்ளார் விஜயா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில். கத்திகுத்து வாங்கிட்டு, நாமினேஷன் பண்ணிய மீனா, வீட்டிற்கு வந்த பின்னர் தான் நாமினேஷனை வாபஸ் வாங்கப் போகிறேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது உடன் இருந்தவர்கள், நீ எதுக்காக நாமினேஷனை வாபஸ் வாங்க வேண்டும். இதெல்லாம் அந்த சிந்தாமணியோட வேலை தான். நீ இதுக்கெல்லாம் பயந்துகிட்டு நாமினேஷனை வாபஸ் வாங்குனேனா, அந்த சிந்தாமணி இன்னும் பயங்கரமா அட்டகாசம் பண்ணும் என சொல்கிறார்கள். இதையடுத்து பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கும் முடிவை கைவிடுகிறார் மீனா.
25
எஸ்கேப் ஆன சிந்தாமணி
மறுபுறம் சிந்தாமணி, நம்ம பண்ணுன சம்பவத்துக்கு பயந்துபோய் அந்த மீனா இந்நேரம் நாமினேஷனை வாபஸ் வாங்கிருப்பா என நினைத்துக் கொண்டிருக்கிறார். மீனாவை கத்தியால் குத்திய ரெளடியிடம் காசை கொடுத்து நீ கொஞ்ச நாள் தலைமறைவா இரு என சொல்லி அனுப்பி வைக்கிறார் சிந்தாமணி. பின்னர் சிந்தாமணியிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் அவரது வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது சிந்தாமணி, தான் இதையெல்லாம் செய்யவில்லை என்றும், அவங்க மேல அனுதாப ஓட்டு வரவேண்டும் என்பதற்காக தான் அவர்களே ஆள் செட் பண்ணி இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் என பிளேட்டை மாற்றிப் போடுகிறார்.
35
அம்மாவுக்கு சவால் விட்ட ரேகா
இதையெல்லாம் சிந்தாமணியின் மகள் ரேகா பார்த்துவிடுகிறார். அம்மா செய்யும் வேலைகள் எதுவும் ரேகாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தன்னுடைய அம்மாவிடம், நீ கண்டிப்பா தோற்கத்தான் போற என சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறார். மறுபுறம் மீனாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார் முத்து. அப்போது அங்கு வரும் மீனாவின் தோழிகள், நீ ஏன் நாமினேஷனை வாபஸ் வாங்குறேன்னு சொல்லுற, அதெல்லாம் வாங்கக் கூடாது என அழுத்தமாக சொல்கிறார்கள். அதேபோல் சிந்தாமணியின் ஆட்கள் அவரிடம், மீனா நாமினேஷனை வாபஸ் வாங்கப் போவதில்லை என்கிற விஷயத்தை சொல்கிறார்கள்.
இதனால் மீனா எலெக்ஷனில் நிற்கப் போவது உறுதியாகிவிட்டதாக அவர்கள் சொல்வதோடு, மீனாவுக்கு தான் அதிக ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார்கள். உடனே சிந்தாமணி 2 லட்சம் பணத்தை கொடுத்து, நமக்கு ஓட்டு போடுறவங்க எல்லார்கிட்டயும் பணத்தை கொடுக்குமாறு சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தோழிகள் கூட்டாக சேர்ந்து மீனாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகிறார்கள். அந்த வழியாக செல்லும் விஜயா, மீனா மீது உள்ள கோபத்தில், அந்த போஸ்டரை எல்லாம் ஒவ்வொன்றாக கிழித்துக் கொண்டிருக்கிறார். யாருக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக முக்காடு போட்டுக் கொண்டு இந்த வேலையை செய்கிறார் விஜயா.
55
முத்துவிடம் சிக்கிய விஜயா
போஸ்டர் கிழிந்து கிடப்பதை பார்த்த மீனாவின் தோழிகள், யார் இதை செஞ்சிருப்பா என செக் பண்ணும் போது விஜயா, ஒரு பக்கம் முக்காடு போட்டுக் கொண்டு போஸ்டரை கிழித்துக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த மீனாவின் தோழிகள், விஜயாவை பிடிக்க செல்ல, அவர் அங்கிருந்து முக்காடு போட்டுக் கொண்டே ஓடுகிறார். அப்போது அவரை பிடித்து அடிவெளுக்கிறார்கள். ஆனால் மூஞ்சை மட்டும் காட்டாமல் எப்படியோ தப்பி ஓடுகிறார். அப்போது எதிரே காரில் வரும் முத்து, முக்காடு போட்டு ஓடுவது தன்னுடைய அம்மா தான் என்பதை பார்த்துவிடுகிறார். பின்னர் மீனாவின் தோழிகளிடம் விசாரிக்கும்போது அவர்கள் நடந்ததை கூறுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.