எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் கல்யாண மேட்டர் ஈஸ்வரிக்கு தெரியவந்ததை அடுத்து அவர் அறிவுக்கரசியை வீட்டை விட்டு விரட்டும் முடிவுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்து போனதால், அவரிடம் அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை சொல்லக் கூடாது என டாக்டர் எச்சரித்திருந்தார். அதையும் மீறி சொன்னால் அவருடைய மைண்ட் டிஸ்டர்ப் ஆகும் என கூறி இருந்தார். இதனிடையே நேற்று தர்ஷனுக்கும், பார்கவிக்கும் கல்யாணம் ஆன விஷயம் ஈஸ்வரிக்கு தெரியவந்திருக்கிறது. பார்கவியோடு, தர்ஷன் சண்டைபோட்டு பிரச்சனை பண்ணியதால், வேறுவழியின்றி தர்ஷினி உண்மையை கூறிவிட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
மயங்கி விழுந்த ஈஸ்வரி
தர்ஷனும், பார்கவியும் காதலித்து கல்யாணம் பண்ணிய விஷயத்தை அனைவரும் தன்னிடம் சொல்லாமல் மறைத்ததால் பதற்றமடைந்த ஈஸ்வரி, மயங்கி விழுந்துவிடுகிறார். இதையடுத்து டாக்டரை வர வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பயப்படுவதற்கு ஒன்னும் இல்லையே என விசாலாட்சி டாக்டரிடம் கேட்க, அவரோ, பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லை. ரொம்ப டென்ஷன் ஆன விஷயமெல்லாம் எதுவும் அவரிடம் பேசிக் கொள்ள வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து வெளியே வரும் ஈஸ்வரி, என் புருஷன் என்கிட்ட பேசுறப்போ இனி உனக்கு என்ன தோணுதோ அதை செய்யுனு சொன்னாரு. அதனால இப்போ என்னோட மனசுக்கு தோணுகிற விஷயத்தை நான் சொல்லப் போறேன் என கூறுகிறார் ஈஸ்வரி.
35
அறிவுக்கரசியை வெளியே போகச் சொல்லும் ஈஸ்வரி
ஈஸ்வரி என்ன சொல்லப்போகிறார் என அனைவரும் ஆவலோடு காத்திருக்க, அவர், அறிவுக்கரசியை கைகாட்டி, இந்த பொண்ணை இந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்பிடுங்க என கூறுகிறார். அவரின் இந்த முடிவை கேட்டதும் நந்தினி, ரேணுகா ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள். ஈஸ்வரி தன்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதும் பிரச்சனை பண்ண ஆரம்பிக்கிறார் அறிவுக்கரசி. அவர் உடனே ஆதி குணசேகரனை பார்த்து, என்னை இந்த விட்டு அனுப்பீருவியா... இப்போ நான் நடந்த உண்மையெல்லாம் சொன்னால் என்ன ஆகும்னு தெரியும்ல, சொல்லட்டுமா என பிளாக்மெயில் பண்ணுகிறார்.
பின்னர் ஈஸ்வரியிடம் சென்று பேசும் அறிவுக்கரசி, என் தங்கச்சி அன்புக்கரசிக்கும், உன் பையன் தர்ஷனுக்கும் தான் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகிருக்கு. கோர்ட்டுக்கு போனால் என்ன நடக்கும்னு தெரியும்ல என கேட்கிறார். அவரிடம் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாத ஈஸ்வரி, என்ன நடக்கும், என்ன நடந்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்ள நாங்கள் தயாரா இருக்கோம். இப்போ நீ இந்த வீட்டை விட்டு வெளிய போடி என விரட்டுகிறார். ஈஸ்வரி தன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் பயப்படாததால், ஆதி குணசேகரன் பக்கம் திரும்பும் அறிவுக்கரசி, அவரிடம் உண்மையை சொல்லட்டுமா என மிரட்டுகிறார்.
55
ட்விஸ்ட் கொடுத்த குணசேகரன்
இவள் உண்மையை சொன்னால் நம்முடைய கதை கந்தலாகிவிடும் என்கிற பயத்தில் ஆதி குணசேகரன் ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார். அறிவுக்கரசி சொல்வதற்கு முன், விட்டா என் பொண்டாட்டியை நான் தான் கொலை செய்ய முயற்சி பண்ணேன்னு சொல்லுவ போல என ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அறிவுக்கரசியும் ஆமா அதான உண்மை என சொல்கிறார். இதைக்கேட்ட ஈஸ்வரி, மேலும் அதிர்ச்சி அடைகிறார். இதனால் ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கி கோமா நிலைக்கு கொண்டு சென்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வரும்போல தெரிகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.