எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டுக்குள் நுழைந்த ஜனனியை அரிவாளால் வெட்ட வந்த அறிவுக்கரசிக்கு தர்ம அடி கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனி சக்தியை காப்பாற்றிய கையோடு, ஆதி குணசேகரனுக்கு எதிரான நடவடிக்கையிலும் இறங்கி, அவரைப் பற்றிய உண்மைகளை ஜட்ஜ் ஒருவரிடம் புட்டு புட்டு வைத்தார். இதையடுத்து ஆதி குணசேகரனை பிடிக்க தனிப்படை ஒன்றையும் அமைத்தது அய்யாதுரை பாண்டியன் தலைமையிலான போலீஸ், மேலும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் குணசேகரன். இதையடுத்து வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. அதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
அறிவுக்கரசியை துரத்திய ஜனனி
அரிவாளை எடுத்துக் கொண்டு ஜனனியை தாக்க வந்த அறிவுக்கரசியை கீழே தள்ளிவிட்டு அடிவெளுக்கிறார் ஜனனி. இதனால் அவர் ஒருபுறம் வலியில் கத்துகிறார். மறுபுறம் முல்லையை தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும் அடிக்கிறார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து அறிவுக்கரசியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார்கள். அதேபோல் தலைமறைவாக உள்ள ஆதி குணசேகரனுக்கு போன் போடு வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக உங்க பரம எதிரி சாருபாலாவை போட்டிருக்கிறார்கள் என கூறுகிறார். இதைக்கேட்டு கதிர், ஞானம் இருவரும் ஷாக் ஆகிறார்கள்.
34
விசாலாட்சிக்கு தெரியவரும் உண்மை
அறிவுக்கரசியை ஓடவிட்ட பின்னர் வீட்டுக்குள் செல்லும் ஜனனி, விசாலாட்சியிடம் பேசுகிறார். இதுக்குமேல உங்ககிட்ட மறைக்க எதுவுமில்லை என கூறிவிட்டு, இந்த சொத்துக்களை வளர்த்தது மட்டும் தான் உங்க மகன், அதோட வேர் தேவகி என சொல்கிறார். உங்க புருஷன் ஆதி முத்துவுக்கு உங்களை தாண்டி இன்னொரு வாழ்க்கை இருந்ததாக ஜனனி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் விசாலாட்சி. அந்தப் பெண்ணை ஏமாற்றி அவர் சொத்தையெல்லாம் எழுதி வாங்கிவிட்டு தான் ஆதி முத்து அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டதாகவும், இந்த சொத்துக்கள் எல்லாம் தேவகிக்கு சொந்தமானது எனவும் ஜனனி, விசாலாட்சியிடம் கூறுகிறார்.
மேலும் இந்த உண்மை அனைத்து ஆதி குணசேகரனுக்கு தெரியும் என்பதையும், அவர் தேவகியை கொன்றுவிட்டதாகவும் கூறும் ஜனனி தற்போது சக்தியை கொலை செய்ய முயன்றதும் உங்க மூத்த மகன் தான் என்று சொன்னதைக் கேட்டதும் வெட வெடத்துப் போன விசாலாட்சி, அவன் இவ்வளவு மோசமானவனா என பதறியபடி கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது விசாலாட்சியும் இனி ஜனனி பக்கம் சாய்ந்துவிடுவார் போல தெரிகிறது. இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனை போலீஸ் கைது செய்ததா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.