ஈஸ்வரி உடன் சண்டைபோடும் ஜனனி... வெடவெடத்துப் போன குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Apr 03, 2026, 10:13 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் உடன் வெளியே சென்று வந்த ஈஸ்வரியிடம் ஜனனி சண்டைபோட்டு இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதை பயன்படுத்தி, அவரை தன் வழிக்கு கொண்டுவர, அளவுகடந்த பாசத்தைக் கொட்டி வருகிறார். அவரால் தான் கோமா நிலைக்கு சென்றோம் என்கிற உண்மை அறியாத ஈஸ்வரி, ஆதி குணசேகரனிடம் படிப்படியாக நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஜனனி, தர்ஷினி, ரேணுகா, நந்தினி ஆகியோர் கடும் கோபம் கொள்கிறார்கள். இதனிடையே ஆதி குணசேகரனுக்கு எதிரான வழக்கும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
விசாரணைக்கு வரும் வழக்கு

ஆதி குணசேகரன் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், எண்ட்ரி கொடுக்கும் வக்கீல், அனைவரையும் அழைத்து பேசுகிறார். ஆதி குணசேகரன் மீதான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாகவும், அவருக்கு எதிராக ஈஸ்வரி சாட்சி சொல்ல முடியாது, அவங்களுக்கு பழசு எல்லாம் மறந்துவிட்டதால், அவர் குணசேகரனுக்கு ஆதரவாக தான் சாட்சி சொல்வார் என கூறுகிறார். அப்போ நாங்களும் அவருடன் சேர்ந்து பொய் சாட்சி சொல்ல வேண்டுமா என ஜனனி கேட்க, வாயடைத்துப் போகிறார் வக்கீல். உங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு தான் நான் இதையெல்லாம் சொன்னேன் என கூறிவிட்டு செல்கிறார்.

35
அண்ணனுக்காக பரிந்து பேசும் தம்பிகள்

ஆதி குணசேகரனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லுமாறு வீட்டில் உள்ள பெண்களிடம் பேசுகிறார் ஞானம். எங்க அண்ணன் செஞ்சது தப்பாவே இருக்கட்டும், அதை பணத்தாலயோ இல்ல சொத்தாலயோ அடைக்கணும்னா சொல்லுங்க, அதையும் நாங்க பண்றோம் என கூறுகிறார். இதைக்கேட்டு டென்ஷன் ஆன ஜனனி, இவ்வளவு தப்பையும் பண்ணிட்டு, இப்போ எல்லாத்தையும் சமநிலைக்கு கொண்டுவர முயற்சி பண்றீங்களா என கேட்கிறார். பின்னர் பேசும் கதிர், சக்தியிடம் அண்ணனை உன்னால மன்னிக்க முடியாதா என கேட்கிறார். அதற்கு அவர், நான் மன்னிச்சிருவேன், ஆனால் இந்த பிள்ளையோட அப்பனை இதே வீட்டுல வச்சு தான அடிச்சீங்க. பார்கவி தான் அதை மறந்திருமா, மன்னிச்சிருமா என கேட்கிறார்.

45
ஈஸ்வரியிடம் சண்டை போடும் ஜனனி

அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த குணசேகரனும், ஈஸ்வரியும் வீட்டுக்கு திரும்புகிறார்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் புது டிரெஸ் வாங்கி வந்திருக்கிறார். அதை ஒவ்வொருவராக அழைத்து கொடுக்கிறார் ஈஸ்வரி. அப்போது ஜனனியிடம் இந்த உனக்கான டிரெஸ் என ஈஸ்வரி கொடுக்க, அதை வாங்க மறுக்கிறார் ஜனனி. ஏன் வாங்க மாட்டேங்குற என ஈஸ்வரி கேட்க, அக்கா ப்ளீஸ் என்னால உங்கள மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு இயல்பாக நடிக்க முடியாது என சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி உனக்கு என்மீது ஏதாவது கோபம் இருக்கிறதா என கேட்க, ஜனனியும் ஆமாம் என சொல்கிறார்.

55
உண்மையை சொல்வாரா ஜனனி?

உங்க மேல நிறைய கோபம், நிறைய ஆதங்கம் இருக்கு. இந்த வீட்டுல இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் என்னால இயல்பாக இருக்க முடியவில்லை. நீங்க வேண்டுமானால் எல்லாத்தையும் மறந்திருக்கலாம். என்னால அப்படி இருக்க முடியாது என ஜனனி சொன்னதும், எனக்கு ஒன்னுமே புரியல என கூறும் ஈஸ்வரி, நீ இப்படி பேசுவதால் என் மனசெல்லாம் படபடனு அடிக்குது என சொல்கிறார். தயவு செஞ்சு என்ன நடந்துச்சுனு சொல்லு என கேட்கிறார் ஈஸ்வரி. அவரிடம் ஆதி குணசேகரன் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் ஜனனி சொல்வாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories