சிங்கப்பெண்ணே ப்ரோமோ: துளசியின் சதி.. சேதுவின் தில்லுமுல்லு:ரத்த வெள்ளத்தில் ஆனந்தி!

Published : Apr 02, 2026, 08:04 PM IST

Singappenne Serial Today April 2 Promo: சன் டிவியின் முன்னணி தொடரான 'சிங்கப்பெண்ணே (Singappenne)' சீரியலின் தற்போதைய ப்ரோமோ (Promo) ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பரபரப்பான எபிசோடின் சுருக்கம் இதோ

PREV
13
சிங்கப்பெண்ணே ப்ரோமோ: துளசியின் சதி.. சேதுவின் தில்லுமுல்லு:ரத்த வெள்ளத்தில் ஆனந்தி!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிங்கப்பெண்ணே' தொடரின் இந்த ப்ரோமோ வீடியோவில், ஆனந்திக்கு, சேதுவின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் பற்றி முத்து மற்றும் அவரது நண்பர் அன்பு விவாதிக்கின்றனர். சரக்கு விநியோகத்தின் போது பெட்டிகளை அடுக்கும் விஷயத்தில் சேதுவுக்கும், ஆனந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை முத்துவின் நண்பர் நினைவுபடுத்துகிறார். பெட்டிகளை இறக்கிச் சோதனையிட ஆனந்தி முயன்றபோது, முத்து அழைத்ததால் அவர் அங்கிருந்து சென்ற விவரம் விவாதிக்கப்படுகிறது.

23
துளசியின் சதிவலை சிங்கப்பெண்ணே

மேலும் சுவந்தர்யா, சேதுவைப் பற்றி பேசியது குறித்து, "சேதுவிடம் எல்லாம் பணமே இருக்காது, அன்னைக்கே ஆனந்தி அவனிடம் 2000 ரூபாய் கேட்கச் சொன்னாள்" என்றார். சேது ஏதோ தில்லுமுல்லு செய்வதை ஆனந்தி கவனித்திருக்கலாம் என்றும், ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாமல் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்கிற தனது கொள்கையினால் அவர் யாரிடமும் பேசாமல் இருக்கிறார் என்று முத்து கருதுகிறார். இறுதியில், ஆனந்திக்கு உடனடியாக அழைத்து அவரிடம் இருக்கும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அன்பு முடிவெடுக்கிறார்.

33
சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ

அதே நேரத்தில், ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் ஆனந்தியின் தலைமுடி இழைகள் இருப்பதை பார்த்து அன்பு அம்மா, துளசியிடம் விசாரிக்கிறார். ”அது ஆனந்தியின் தலைமுடி என்று அடையாளம் காணப்பட, "இது எதுக்கு நீ வைத்திருக்கிறாய்?" என்ற கேள்வி எழுகிறது. அவளை உலகத்தை விட்டு அனுப்ப போகிறேன் என்று துளசி சொல்ல அன்பு அம்மாவிற்கு கோபம் வருகிறது. இந்த ப்ரோமோ, சேதுவின் மர்மமான செயல்கள் வெளிச்சத்திற்கு வருமா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. மறுபக்கம் ரத்த வெள்ளத்தில் இருக்கும் ஆனந்திக்கு என்னவாகும் என்ற பதற்றமும் நீடிக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories