ஃபுட் டிரக்கை காணோமா? பதறிப்போன ஜனனி... குணசேகரனின் அடுத்த மூவ் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Jan 08, 2026, 10:50 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஃபுட் டிரக்கிற்கு ஏதேனும் ஆபத்து வந்திருக்குமோ என்கிற பயத்தில் அதனை பார்க்க அவசர அவசரமாக ஓடிச் செல்கிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸை தடுக்க, ஆதி குணசேகரனின் கூட்டாளியான குமார் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கிறார். முதலில் ஜனனியின் தமிழ் சோறு ஃபுட் டிரக் எதிராக தனக்கு தெரிந்த பாய் ஒருவரை அனுப்பி, பிரியாணி கடை போடுமாறு சொன்னார். ஆனால் அந்த பிரியாணி பிளான் சொதப்பியது. இதையடுத்து, அந்த ஏரியா கவுன்சிலரை தூண்டிவிட்டு, அவர்களை மிரட்டி இருக்கிறார். ஆனால் ஜனனி இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ என சொல்லிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
உண்மையை உடைக்கும் நந்தினி

தமிழ் சோறு ஃபுட் டிரக்கிற்கு ஆன்லைன் ஆர்டர்களும் வரத் தொடங்கி உள்ளதால், அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இரண்டாம் நாள் நல்லபடியாக கடையை முடித்து வீட்டுக்கு சென்ற பின்னர், விசாலாட்சியிடம் அவரது கணவர் பற்றிய உண்மையை சொல்ல உள்ளதாக கூறுகிறார் நந்தினி. தற்போது வேண்டாம் என ஜனனி தடுக்க, இன்னும் எத்தனை நாள் தான் அதை மூடி மறைக்க முடியும் எனக்கூறி ஆதிமுத்து, உங்களை தவிர்த்து தேவகி என்கிற வடநாட்டு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டதாகவும், இந்த சொத்து முழுக்க தேவகியோடது என்றும் சொல்லிவிடுகிறார்.

34
ஃபுட் டிரக் என்ன ஆச்சு?

கவுன்சிலர் வந்து மிரட்டிச் சென்றதை அடுத்து, குழப்பத்திலேயே இருக்கும் ஜனனி, ஃபுட் டிரக்கிற்கு ஏதாவது ஆகிடுமோ, அதை உடைத்துவிடுவார்களோ என்கிற பயத்திலேயே இருக்கிறார். காலையில் எழுந்ததும், ஃபுட் டிரக்கை இரவோடு இரவாக தூக்கி இருப்பார்களோ என்கிற பயத்தில் சக்தியை அழைத்துக் கொண்டு ஃபுட் டிரக் இருக்கும் இடத்துக்கு செல்கிறார் ஜனனி, அங்கு சென்று பார்க்கும்போது ஃபுட் டிரக் எந்தவித சேதாரமும் இன்றி நிற்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இதையடுத்து வீட்டில் இருப்பவர்களுக்கு போன் போட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை கூறுகிறார்.

44
காமெடியாக பேசும் விசாலாட்சி

ஆதி முத்து தன்னை ஏமாற்றி தேவகியை திருமணம் செய்துகொண்டதை பற்றி கவலைப்படாத விசாலாட்சி, காலையில் வீட்டு பெண்களிடம் ஜாலியாக பேசுகிறார். அப்போது பேசும் தர்ஷினி, உங்க புருஷன் ராமேஸ்வரத்துக்கு போய் உங்களை ஏமாத்திவிட்டு, பிரியாணி வாங்கிக் கொடுத்து உங்களை கவர் பண்ணியிருக்கிறார் என சொல்ல, அதற்கு விசாலாட்சி, அந்த பிரியாணி வாங்கிட்டு வந்த மனுஷன் நல்லவனா இல்லேனாலும், அவர் வாங்கிட்டு வந்த பிரியாணி நல்லா இருக்கும்டி என சொன்னதும், அதைக்கேட்டு நந்தினி மற்றும் ரேணுகா சிரிக்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories