எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் மதிவதினியும் சேர்ந்து ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரத்தை கைப்பற்ற புது திட்டம் தீட்டி உள்ளனர். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஆதி குணசேகரன் அவருடைய மனைவி ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தற்போது ராவணன் கையில் இருக்கிறது. அவர் அந்த வீடியோவை ஜனனிக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில், அவர் பார்த்த உடன் அந்த வீடியோ டெலிட் ஆகிவிடுகிறது. இதனால் அந்த வீடியோ இருக்கும் நபரை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக மதிவதினியின் உதவியை நாடி இருக்கிறார் ஜனனி. அந்த வீடியோவை கைப்பற்றினால் ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிடலாம் என்கிற பிளானில் உள்ளார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ரேணுகா கொடுத்த பதிலடி
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக திருப்பிவிட்டது போல் நந்தினி மற்றும் ரேணுகாவையும் திருப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள் கதிர் மற்றும் ஞானம். அதில் முதல்படியாக பெட்ரூமுக்குள் சென்றதும் கதிர், ஞானம் இருவரும் தங்கள் மனைவியிடம் வழிந்து பேசுகிறார்கள். குறிப்பாக இருவரும் ஒரு முளம் மல்லிகை பூவை எடுத்து நீட்டி உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன் என கூறுகிறார்கள். இதற்கெல்லாம் மசியாத ரேணுகா, எப்படி இதை தலையில வச்சிக்கவா இல்ல காதுல வைக்கவா, உங்க அண்ணன் ஈஸ்வரி அக்காவுக்கு வாங்கி கொடுத்தாருல்ல, அதுல மிச்சம் இருக்குறது கொண்டுவந்து நீங்க ஏங்கிட்ட தர்றீங்களாக்கும். இந்த வேலையெல்லாம் எங்கிட்ட செல்லுபடி ஆகாது. போய் தூங்குங்க என சொல்லிவிடுகிறார்.
35
கோபத்தில் ராவணன்
மறுபுறம் மதிவதினி இனி தன்னுடைய குழந்தையை ராவணன் பார்க்க வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவரிடம் பேசுகிறார் ராவணன். அப்போது அவரிடம், லைஃப்ல ஒருமுறையாவது தோத்துப் போகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு, ஆனால் இந்த மதிவதினியிடம் மட்டும் தோத்துப் போக மாட்டேன் என சொல்கிறார். அப்போது அங்கிருந்த வக்கீல், எதுக்கு சார் அந்த லேடியை போட்டு இப்படி டார்ச்சர் பண்றீங்க என கேட்கிறார். அதற்கு அவர் கோபத்தில் ஷட் அப் என சொல்லிவிட்டு அவரை வெளியே போக சொல்கிறார்.
இதன்பின்னர் மதிவதினிக்கு போன் போட்டு பேசுகிறார் ஜனனி. அப்போது அவர் ஒரு ஐடியா கொடுக்கிறார். அது என்னவென்றால், அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை லாக் பண்ணலாம் என சொல்கிறார். அதுமாதிரி எந்த இடத்திலும் நீங்கள் உங்களை வித்தியாசமாக காட்டாதீர்கள். ஏனெனில் அவங்க ரியாக்ஷன் எல்லாம் எப்படி போகுது என்பதை கண்டுபிடித்தால் தான், அதுக்கு ஏத்தமாதிரி நம்ம ஏதாவது மூவ் பண்ண முடியும் என சொல்கிறார். அதற்கு ஓகே சொன்ன ஜனனி, ஆதி குணசேகரன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத் தொடங்குகிறார். அதன் முதல் படியாக பெண்கள் அனைவரையும் தர்ஷன் கல்யாணத்துக்காக புடவை எடுக்க அனுப்புகிறார் குணசேகரன்.
55
ஆதி குணசேகரனுக்கு வந்த டவுட்
அந்த கேப்பில் அவருக்கு எதிரான ஆதாரத்தை திரட்டும் வேலைகளில் இறங்குகிறார் ஜனனி. மறுபுறம் தன்னுடைய தம்பிகளிடம் பேசும் ஆதி குணசேகரன், ஜனனி மீதுள்ள சந்தேகத்தை சொல்கிறார். அவ கையில எதுவும் இல்லாம வெறும் வாயில வடை சுடுறவ இல்ல. ஏதோ ஒன்னை தெரிஞ்சிகிட்டு தான் அவ எல்லா வேலையும் பாக்குறா என சொல்கிறார். அந்த நேரத்தில் தான் ராவணனிடம் இருந்து ஒரு வீடியோ ஆதி குணசேகரன் போனுக்கு வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்னென்ன ட்விஸ்ட் அரங்கேறப்போகிறாது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.