Ethirneechal Thodargiradhu Serial Today 260th Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தத்தை சுட்டுக் கொன்றுவிட்டதாக புலிகேசி, அறிவுக்கரசிக்கு தகவல் கொடுக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வர, அவரை தேடிக் கண்டுபிடித்து கூட்டி வர ஜனனி, தனியாக காரில் செல்கிறார். ஜீவானந்தமும், பார்கவியும் பெரியகுளம் வருவதாக சொன்னதால், அங்கு சென்று அவர்களை மீட்க செல்கிறார் ஜனனி. மறுபுறம் மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்புக்கு ரெடியாக முடியாது என தர்ஷன் முரண்டு பிடிக்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
குஷியான அறிவுக்கரசி
ஜீவானந்தத்தை துப்பாக்கியால் சுட்ட புலிகேசி, அவரை தேடிக் கண்டுபிடிக்கும் முன்னரே அறிவுக்கரசிக்கு போன் போட்டு, தான் ஜீவானந்தத்தை சுட்டுக் கொன்றுவிட்டதாக சொல்லிவிடுகிறார். இந்த தகவலை கேட்டு குஷியான அறிவுக்கரசி ஆதி குணசேகரனிடம் சென்று வேட்டை முடிஞ்சது மாமா, ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொன்றுவிட்டதாக கூறுகிறார். இதனால் ஆதி குணசேகரன், கதிர், ஞானம் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். பின்னர் இந்த தகவலை முல்லையும், கரிகாலனும் மண்டபத்துக்கு வெளியே இருக்கும் நந்தினி மற்றும் ரேணுகாவிடம் சொல்கிறார். இதைக்கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
34
போனை தவறவிட்ட ஜனனி
தாங்கள் சொல்வதை நம்பாவிட்டால் நியூஸ் சேனலை பார்த்து தெரிந்துகொள்ளுமாறு கூறுகிறார் கரிகாலன். பின்னர் ஜனனிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறார் ரேணுகா. ஆனால் ஜனனி பெரியகுளம் செல்லும் வழியில் ஒரு கடையில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கியபோது, அங்கேயே மறந்து போனை விட்டுச் சென்றுவிடுகிறார். இதனால் அந்த போனை எடுத்து பேசும் கடைக்காரர், ஜனனி போனை விட்டுச் சென்ற தகவலை சொல்கிறார். இதனால் ஜனனியை எப்படி தொடர்புகொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் ரேணுகா, சக்திக்கு போன் போட்டு பேசுகிறார்.
ஜீவானந்தம், பார்கவியை புலிகேசி சுட்டுக் கொன்றுவிட்டதாக சக்தியிடம் கூறுகிறார் ரேணுகா. அதேபோல் ஜனனி போனை மிஸ் பண்ணியதையும் கூறுகிறார். இதனால் என்ன செய்வதறியாது திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் சக்தி. மறுபுறம் பார்கவியை புலிகேசி கொன்ற தகவல் அறிந்த கவலையில் இருக்கும் தர்ஷன், கல்யாணத்துக்கு ரெடியாக மறுக்கிறார். அவனிடம் பேசும் அன்புக்கரசி, இவ்ளோ நாள் உங்க சித்திகள் எல்லாம் பிரச்சனை செய்தார்கள் இப்போ நீங்க ஆரம்பிக்கிறீங்களா என கேட்கிறார்.
இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? ஜீவானந்தத்தையும் பார்கவியையும் புலிகேசி உண்மையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டாரா? பெரியகுளம் சென்ற ஜனனியின் நிலைமை என்ன ஆனது? தர்ஷன் - அன்புக்கரசியை திருமணம் செய்துகொள்வாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.