குதூகலமாக இருந்த கதிர் - ராஜி... வயித்தெறிச்சலில் திட்டிய கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

Published : Feb 05, 2026, 09:22 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிருடன் பீச்சில் எடுத்த போட்டோவை ஸ்டேட்டஸாக வைத்த ராஜியை கோமதி போன் போட்டு திட்டி இருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி மீது கடும் கோபத்தில் இருக்கும் பாண்டியன் அவர் கொடுத்த லெட்டரை படிக்காமல் அதில் பொட்டலம் போட்டு கொடுத்துவிட, பின்னர் மீனாவிடம் இந்த விஷயத்தை சொல்லி ஃபீல் பண்ணிய கோமதி அந்த லெட்டரில் பெயர் எதுவும் எழுதாமல் இருந்ததை சொல்ல, உடனே அந்த பொட்டலம் வாங்கிய பெண்ணை சேஸ் பண்ணி பிடித்து அந்த லெட்டரை மீண்டும் வாங்குகிறார் கோமதி. பின்னர் அதை கொண்டு வந்து பாண்டியனிடம் மறுபடியும் நீட்டுகிறார். அவரோ அதை கசக்கிப்போட்டுவிட்டு கோமதி போன பின்னர் எடுத்து வைத்துக் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

25
கைரேகை பார்க்கும் கதிர் - ராஜி

சென்னைக்கு கோச்சிங் கிளாஸ் சென்றுள்ள ராஜி, அங்கு கிளாஸ் முடிந்ததும் கதிருடன் சேர்ந்து பீச்சுக்கு செல்கிறார். அங்கு இருவரும் ரொமான்ஸ் பண்ணுகிறார்கள். அப்போது ஜோசியம் பார்க்க ஒரு அம்மா வருகிறது. அவர் இருவருக்கும் கைரேகை பார்க்கிறேன் என சொல்லி வலுக்கட்டாயமாக கதிரின் கையை பிடித்து பார்க்கிறார். இந்த பொண்ணால தான் உன்னோட வாழ்க்கையே பெரிய இடத்துக்கு போகப் போகுது, உங்க ரெண்டு பேருக்கும் அழகான பெண் குழந்தை பிறக்கப் போகுதுனு சொல்லிட்டு போயிடுறாங்க. இதைக்கேட்ட ராஜிக்கு வெட்கம் வருகிறது.

35
மீனாவை திட்டிய கோமதி

மறுபுறம் கோமதியும், மீனாவும் டென்ஷனாக வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது அங்கு இருந்த அரசி, லெட்டரை கொடுத்துட்டீங்களா என கேட்க, அந்த லெட்டரை அவரு படிக்கவே இல்ல, அங்க முட்டை வாங்க வந்த பெண்ணிடம் மடிச்சு கொடுத்துட்டாரு என சொல்லி ஃபீல் பண்ணும் கோமதி, இவகிட்ட கூட பேசுறாரு, ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தைகூட பேச மாட்டேங்குறாருனு சொல்லி சங்கடப்படுகிறார். உனக்கு உதவி பண்ண வந்த மீனா அண்ணியை ஏன்மா திட்டுறனு அரசி கேட்க, ஆமால்ல இவ எனக்கு தான உதவி பண்ண வந்தா, எனக்கு என்னென்னமோ மனசுக்குள்ள ஓடுதுனு சொல்லுகிறார்.

45
ராஜி போட்ட ஸ்டேட்டஸால் கடுப்பாகும் கோமதி

மீனாவை திட்டியதற்காக கோமதி மன்னிப்பு கேட்கிறார். அப்போது அரசி, போனை பார்க்கும் போது அதில், ராஜி வைத்த ஸ்டேட்டஸை பார்த்துவிடுகிறார். கதிர் உடன் பீச்சில் எடுத்த போட்டோவை தான் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார் ராஜி. இதை கோமதியிடமும் காட்டுகிறார் ராஜி. உடனே கோமதி, ராஜிக்கு போன் போட்டு, உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சதால நான் என் புருஷன் கூட பேச முடியாம இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் அங்க ஜாலியா இருக்கீங்களா என திட்டுகிறார்.

55
மன்னிப்பு கேட்ட கோமதி

உடனே அருகில் இருந்த அரசி, என்னம்மா இப்படி பேசுற என கேட்க, உடனே சுதாரித்துக் கொண்ட கோமதி, மறுபடியும் ராஜிக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்கிறார். அத்தை ஏன் இப்படி நடந்துக்குறாங்கனு ராஜிக்கு புரியவே இல்ல. அதன்பின்னர் கதிர், ராஜியை சாப்பிட அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் மட்டன், சிக்கன் என விதவிதமாக ஆர்டர் பண்ணி வெளுத்துக்கட்டுகிறார்கள். அப்போது கதிரிடம் பேசும் ராஜி, என்மேல உனக்கு கோபம் எதுவும் இல்லேல்ல, என்னால தான் உன்வீட்டுல இவ்வளவு பிரச்சனை என கேட்க, அதற்கு கதிர், இப்படியெல்லாம் நடந்ததுனால தான நம்ம கல்யாணமே நடந்துச்சுனு சொல்லி சந்தோஷப்படுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories