அய்யனார் துணை சீரியலில் நிலாவை தொடர்ச்சியாக லவ் டார்ச்சர் பண்ணி வரும் ராகவ்விடம் தான் சோழனின் மனைவி என்கிற உண்மையை போட்டுடைத்துள்ளார் நிலா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் சோழன் தன்னைப் பார்த்ததும் விலகி விலகி செல்வதை நோட் பண்ணிய நிலா, அவரை தனியாக அழைத்து என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். அதற்கு சோழன், ராகவ் செய்யும் சில்மிஷ வேலைகளை சொல்லி, அவன் உங்கள அவனோட ஆளுனு சொல்றான் என கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் நிலா, எனக்கு அவன் மீது எந்த ஒரு காதலும் இல்லை என கூறுகிறார். மறுநாள் ஆபிஸுக்கு சென்று ராகவ்விடம் இதைப்பற்றி கேட்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார் நிலா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ராகவ்வை பொளந்துகட்டிய நிலா
மறுநாள் நிலா பயங்கர டென்ஷனோடு ஆபிஸில் அமர்ந்திருக்கிறார். அப்போது உள்ளே எண்ட்ரியாகும் ராகவ், நிலாவிடம், வந்து இன்னும் நான் கொடுத்த வாட்சை நீ கட்டலையா என கேட்கிறார். இதையடுத்து ராகவ்வின் ரூமுக்கு சென்று பேசும் நிலா, நீங்க ஏன் சோழனிடம் அப்படி சொன்னீங்க என கேட்கிறார். என்னை உன்னோட ஆளுனு சொல்லி வச்சிருக்கீங்க. அதுமட்டுமில்ல, நீங்க எனக்கு கிஃப்ட் கொடுக்குறதை போட்டோ எடுத்து, அதை ஸ்டேட்டஸ்ல போட்டு, லவ் சிம்பள், கிஸ் எமோஜிலாம் வச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் என கேட்டு ராகவ்வை பொளக்கிறார் நிலா.
35
ஆதாரத்தை காட்டிய நிலா
உங்களால தான் எனக்கும் சோழனுக்கும் சண்டை வந்திருச்சு என நிலா சொல்ல, இதுனால எதுக்கு சோழன் சண்டை போடுறாப்ள, அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அவரு ஏன் கோபப்படனும் என ராகவ் கேட்கிறார். ஆமா அவரு கோபப்படுவாரு, அவரு தான் என்னோட புருஷன் என சொல்கிறார் நிலா. இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் ராகவ், நீ சும்மா ஜோக் அடிக்குற தான, நான் இதெல்லாம் நம்பவே மாட்டேன், நீ அவனோட Cousin-னு தான சொன்ன, இப்ப வந்து காமெடி பண்ணிட்டு இருக்கியா அப்படினு ராகவ் கேட்ட உடனே, நிலா, தன்னுடைய கல்யாண போட்டோவை எடுத்து காட்டுகிறார்.
அந்த போட்டோவை பார்த்த பின்னர் தான் ராகவ்வுக்கு உண்மை தெரியவருகிறது. மறுபுறம், சேரன் கட்டிட வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் இன்ஜினியர், புதுசா கட்டப்போற பில்டிங்கோட ஆர்கிடெக்ட் உன்னை பார்க்கணும்னு சொன்னாருனு சொல்லி சேரனை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சென்று பார்த்த பிறகு ராகவ் தான் ஆர்கிடெக்டா உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் சேரன் தான் வரப்போகிறார் என்பது தெரியாது. இருவரும் பார்த்தது சர்ப்ரைஸ் ஆகிறார்கள்.
55
உண்மையை உலறிய சேரன்
அதன்பின்னர் புதிதாக கட்ட உள்ள பில்டிங் பற்றி சேரனிடம் விவரிக்கிறார் ராகவ். பின்னர் ராகவ் யதார்த்தமாக சோழன், நிலா பற்றி கேட்க, சேரன் எல்லா உண்மையையும் உலறிவிடுகிறார். அவர்கள் கல்யாணம் பண்ணியதில் இருந்து, சண்டை போட்டது வரை எல்லா கதையையும் சொல்லிவிட்டு, கடைசியாக சோழனும், நிலாவும் டைவர்ஸ் அப்ளை பண்ணியிருக்கும் விஷயத்தையும் சொல்கிறார் சேரன். அவங்க ரெண்டு பேரும் விருப்பமின்றி செய்துகொண்ட திருமணம் இது, அதனால் இருவரும் பிரியப்போகிறார்கள் என்று சேரன் சொல்ல, அதைக்கேட்டு குஷியாகிறார் ராகவ். இதையடுத்து என்ன ஆச்சு என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.