பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மீனா கொடுத்த ஐடியாவை பாலோ பண்ணி பாண்டியனை பழிவாங்குகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், அரசி மீனாவுக்கு போன் பண்ணி வீட்டில் அம்மா - அப்பா இடையே நடந்த பிரச்சனையை பற்றி சொல்கிறார். இதனால் அம்மா சாப்பிடாமயே இருக்காங்க என சொல்லுகிறார். உடனே மீனா கிளம்பி கோமதியின் வீட்டுக்கு வருகிறார். வந்த கையோடு கோமதிக்கு அட்வைஸ் பண்ணுகிறார். இனி நீங்க அவரை கண்டுக்கவே கண்டுக்காதீங்க. அவர் இங்க இருக்குறதாவே நீங்க நினைக்காதீங்க. அவர் எப்படி உங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறாருனு பாத்தீங்கள்ல, உங்க முகத்தை கூட பார்த்து பேசமாட்டேங்குறாரு. அதே மாதிரி நீங்களும் கண்டுக்காம இருங்க என ஐடியா கொடுக்கிறார்.
25
மீனா கொடுத்த ஐடியா
நீங்க வழிய வழிய சென்று பேசுவதால் தான் அவர் இறங்கி வரமாட்டேங்குறாரு. நீங்க கண்டுக்காம இருங்க, அவரே உங்க வழிக்கு வந்துவிடுவார். உங்க பையனையும் நான் இப்படி தான் டீல் பண்ணுவேன் என சொல்கிறார் மீனா. இனி பாரு என்னோட ஆட்டத்தை என கோமதி, பாண்டியனை பழிவாங்க ரெடியாகிறார். மறுபுறம் தங்கமயில், மீனா வேலைக்கு சேர்த்துவிட்ட இடத்தில், மீனாவின் தோழியோட அம்மாவை நன்கு கவனித்துக் கொள்கிறார். மாலையில் அந்த வயதான அம்மாவுடைய மகள் வீட்டுக்கு வந்ததும் தங்கமயிலை வீட்டுக்கு கிளம்ப சொல்கிறார். தங்கமயிலும் கிளம்பிச் செல்கிறார்.
35
குமரவேலை பார்க்க வந்த பெண் வீட்டார்
மறுபுறம் குமரவேலுக்கு பொண்ணு பார்த்திருப்பதாக முத்துவேல் ஏற்கனவே சொல்லி இருந்த நிலையில், மாப்பிள்ளையை பார்க்க பொண்ணு வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மாப்பிள்ளையை பிடித்துப் போக, ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என பேசி முடிக்கிறார்கள். இருவீட்டாரும் தட்டை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் குமரவேலுக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட இஷ்டமே இல்லை. அவர் அரசியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார். விரைவில் குமரவேல் கல்யாணம் வர இருக்கிறது.
தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வர, அவரிடம் அவருடைய அம்மா கோமதி, என்ன காலையில போன இப்போ தான் வர்ற என கேட்க, அவரும் மீனா தனக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். மறுபுறம் பாண்டியன் வீட்டுக்கு வருகிறார். அவர் வந்த உடனே மீனா சொன்னபடி, கோமதி பாண்டியனை கண்டுக்காமல் இருக்கிறார். பாண்டியன் கடையில் இருந்து வந்த உடனே வழக்கம் போல தன்னிடம் உள்ள பணப்பையை நீட்டுகிறார். ஆனால் அதை வாங்காமல் குத்துக்கல் போல நிற்கிறார் கோமதி.
55
கோபத்தில் எழுந்து சென்ற பாண்டியன்
அதன்பின்னர் எல்லோரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறும் கோமதி, பாண்டியனுக்கு மட்டும் எதுவும் வைக்காமல் இருக்கிறார். ஓ ஹோ இப்போ நீ என்னைய கண்டுக்காம இருக்கியா, எனக்கு உன் சாப்பாடே வேண்டாம் என எழுந்து செல்கிறார். மீனா பேச்சைக் கேட்டு கோமதி பாண்டியனை பழிவாங்கும் நிலையில், அதனால் என்னென்ன பிரச்சனையெல்லாம் நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.