எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சினிமாவுக்கு நிகரான சஸ்பென்ஸோடு சென்றுகொண்டிருக்கிறது. இதில் தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள். தர்ஷனின் திருமணம் நெருங்கி வரும் நிலையில், பார்கவியை எப்படியாவது தர்ஷன் உடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என முயற்சித்து வரும் ஜீவானந்தம், புலிகேசி டீமிடம் இருந்து தப்பித்து, காட்டு வழியே எஸ்கேப் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷன் கொடுத்த ட்விஸ்ட்
தர்ஷனை அழைத்து வந்து ஜனனி, சக்தி ஆகியோர் முன் நிறுத்து சொல்ல சொல்கிறார் குணசேகரன். தர்ஷனும் அங்கு வந்து, நீங்கெல்லாம் கிளம்புங்க, இந்த கல்யாணத்தை பொறுத்தவரைக்கும் எனக்கு முழு சம்மதம் என கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன சக்தி, இம்புட்டு நாளா என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியுமாடா... உனக்கு சாப்பாட்டுல கண்ட மருந்து கலந்து கொடுத்திருக்காங்க. அதனால் தான் இத்தனை நாளா பித்து பிடிச்ச மாதிரி கிடந்த, இப்ப தான் கொஞ்சம் தெளிஞ்சிருக்க, நான் உன்கூட இருக்கேன் டா என சக்தி சொன்னதும், எனக்கு யாருமே வேண்டாம் என சொல்கிறார் தர்ஷன்.
34
குணசேகரன் காலில் விழுந்து கெஞ்சிய தர்ஷன்
தொடர்ந்து பேசும் தர்ஷன், நான் செய்த தப்புக்கு நான் தான் தண்டனை அனுபவிக்கனும். பார்கவியை காதலிச்சுட்டு காதலிக்கவே இல்லைனு சொல்லிட்டு நான் தான் அன்புவை ஏத்துக்கிட்டேன். திரும்பவும் அதில் இருந்து பின்வாங்கிவிட்டு, திரும்பவும் ஏத்துக்கிட்டேன். நான் ஒரு பைத்தியம். எனக்கு இதுதான் சரியா வரும். நீங்கெல்லாம் கிளம்புங்க என சொன்னதோடு, ஆதி குணசேகரனிடமும் கெஞ்சுகிறார் தர்ஷன். நான் அவர்களை அனுப்பிவிடுகிறேன். அன்புக்கரசி கழுத்திலேயே தாலி கட்டுகிறேன் என சொல்லும் அவர், எனக்காக ஒன்னே ஒன்னு செய்யுங்க, தயவு செஞ்சு பார்கவியை விட்டுறுங்க. ஜீவானந்தம் சாரையும் விட்றுங்க, எங்க அம்மாவையும் விட்றுங்கப்பா என ஆதி குணசேகரன் காலில் விழுந்து கதறுகிறார் தர்ஷன்.
இதைப் பார்த்து டென்ஷன் ஆன ஜனனி, அய்யோ தர்ஷா, இப்போ எதுக்கு இவங்கள பார்த்து நீ பயப்படுற. இப்படி மிரட்டி ஒருத்தரை பணியவைக்க முடியாதுங்கிறது எல்லாருக்கும் உரைக்கனும், என்ன ஆனாலும் சரி, நாங்க எல்லாரும் உன்கூட இருக்கோம் என ஜனனி சொன்னாலும், அதை கேட்க மறுக்கும் தர்ஷன், எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம். தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க என சொல்லிவிடுகிறார் தர்ஷன். இதையடுத்து மண்டபத்தை விட்டு சக்தி மற்றும் ஜனனி ஆகியோர் வெளியேறுகிறார்கள். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.