குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் இவரா? லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்..!

Published : Sep 25, 2025, 12:18 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்கிற தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

PREV
14
Cooku With Comali 6 Title Winner

விஜய் டிவியில் காமெடி நிறைந்த ஒரு கலக்கலான குக்கிங் ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சி முதன்முதலில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வென்றார். இதையடுத்து இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். பின்னர் நடந்த மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், நான்காவது சீசனில் மைம் கோபியும், ஐந்தாவது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டேவும் டைட்டில் ஜெயித்தனர். இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், இதில் யார் வின்னர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

24
குக் வித் கோமாளி சீசன் 6

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் மதுமிதா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா, லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தக்குமார், பிரியா ராமன், ராஜு ஜெயமோகன், ஷபானா, உமைர், ஜாங்கிரி மதுமிதா ஆகிய 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இவர்களில் முதல் ஆளாக பைனலுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஷபானா. இதற்கு அடுத்தபடியாக லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராஜு ஆகியோர் பைனலுக்கு சென்ற நிலையில், இறுதியாக நடந்த வைல்டு கார்டு சுற்றில் வெற்றிபெற்று உமைர் நான்காவது ஆளாக பைனலுக்குள் நுழைந்தார். இவர்கள் நான்குபேர் தான் இறுதிப் போட்டியில் மோத உள்ளனர்.

34
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில், அந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால், யார் வெற்றியாளர் என்கிற விவரமும் லீக் ஆகி உள்ளது. அந்த வகையில் இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்த ஷபானா தான் டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இறுதிப்போட்டியில் ராஜு, லட்சுமி ராம கிருஷ்ணன் மற்றும் உமைர் ஆகியோருடன் நடந்த போட்டியில் வெற்றி பெற்று ஷபானா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் டைட்டிலை தட்டிதூக்கி இருக்கிறார்.

44
யார் இந்த ஷபானா?

ஷபானா ஒரு சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்கிற சூப்பர் ஹிட் சீரியலில் கார்த்திக் ராஜுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். அந்நிகழ்ச்சி ஹிட்டான பின்னர் சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷபானா. சமீபத்தில் இவர் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். போலீஸ் போலீஸ் என்கிற வெப் தொடரில் வக்கீல் ஆக நடித்திருந்தார் ஷபானா. இந்த வெப் தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ள தகவல் வெளிவந்துள்ளதால் ஷபானாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories