ஓஹோ இதுதான் விஷயமா... முத்துவுக்கு தெரியவரும் விஜயாவின் இன்னொரு முகம் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Sep 25, 2025, 09:52 AM IST

சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா பொய் சொல்லி டாக்டர் பட்டம் வாங்க உள்ள விஷயம் முத்துவுக்கு தெரியவரும் நிலையில், அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, தன்னுடைய யோகா செண்டரில் இரத்த தான முகாம் நடத்துவதாக கூறி தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து இருந்தார். அங்கு சென்று பார்த்த முத்து, மீனாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இந்த இரத்த தான முகாமை வீடியோ எடுக்க மீடியாவில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்திருந்ததால், அவர்களுக்கு சந்தேகம் அதிகரிக்கிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்பதை அறிந்து, அதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். அதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
முத்துவுக்கு தெரியவரும் உண்மை

விஜயாவின் தோழி பார்வதியிடம் நைசாக பேச்சுகொடுக்கும் முத்து, அவரிடம் குடிக்க தண்ணி கேட்கிறார். அவரும் தண்ணி எடுத்து வந்து கொடுக்க, அவரிடம் அத்தை ரொம்ப நாளா அம்மா என்னென்னமோ பண்ணிட்டு இருக்காங்க. அது என்னனு தெரியாம இருந்துச்சு. ஆனா இன்னைக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு என முத்து சொல்ல, உடனே பார்வதி, அவ டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு தான் இதெல்லாம் செய்யுறாங்குற விஷயம் உனக்கும் தெரியுமா என கேட்டு, தன் வாயாலேயே மாட்டிக் கொள்கிறார் பார்வதி. இதைக்கேட்டு ஷாக் ஆன முத்து, ஓஹோ இதுதான் விஷயமா என தெரிந்துகொள்கிறார்.

34
உலறிய கோமதி

அம்மா ஏதோ ஏரியா கவுன்சிலருக்கு போட்டி போடப்போறாங்கனு நான் நினைச்சேன் என முத்து சொல்ல, அதற்கு பார்வதி, அப்போ நானா தான் உலறிவிட்டேனா என கூறுகிறார். அம்மாவுக்கு எப்படி டாக்டர் பட்டம் கிடைக்கும் என முத்து கேட்க, அதற்கு அவர், சமூக சேவைகள் செய்பவர்களுக்கு என்னுடைய பிரெண்டு கோகிலா டாக்டர் பட்டம் வாங்கித் தருவா என சொல்கிறார். அதுக்கு தான் விஜயா இதெல்லாம் பண்ணுறா என பார்வதி சொன்னதை கேட்ட முத்து, ஓஹோ அம்மாவோட இந்த திடீர் அவதாரத்துக்கு இதுதான் காரணாமா என கேட்கிறார். ஆமா அதற்கு தான் அவ நல்லது செய்யுற மாதிரி செய்யுறா, நான் அதை வீடியோ எடுக்குறேன் என அனைத்தையும் சொல்லிவிடுகிறார் பார்வதி.

44
விஜயாவுக்கு ஆப்பு

நான் தான் இதை உன்னிடம் சொன்னேன்னு சொல்லிடாத என முத்துவிடம் பார்வதி கெஞ்சிக் கேட்க, அதற்கு முத்துவும் நான் சொல்லவே மாட்டேன் அத்தை என கூறுகிறார். பின்னர் மீனாவிடம் விஷயத்தை கூறுகிறார் முத்து, அதற்கு அவர், டாக்டர் பட்டம் படிக்காமலே வாங்க முடியுமா என கேட்க, அதற்கு முத்து, இது வேறமாதிரி டாக்டர் பட்டம். சமூக சேவை செய்யுறவங்களுக்கு, சயிண்டிஸ்டுகளுக்கு தான் இந்த டாக்டர் பட்டமெல்லாம் கிடைக்கும். ஆனா அம்மா ஏமாத்தி டாக்டர் பட்டம் வாங்க பாக்குறாங்க என சொல்லும் முத்து. அதை தடுக்க களத்தில் இறங்குகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories