சீரியல் நடிகையின் ஆபாச போட்டோக்களை இணையத்தில் பரவவிட்ட கல்லூரி மாணவன் அதிரடி கைது

Published : Jan 06, 2023, 07:34 AM ISTUpdated : Jan 06, 2023, 07:37 AM IST

ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் பரவவிட்ட புகாரில் கல்லூரி மாணவன் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

PREV
14
சீரியல் நடிகையின் ஆபாச போட்டோக்களை இணையத்தில் பரவவிட்ட கல்லூரி மாணவன் அதிரடி கைது

ராஜா ராணி 2 சீரியலின் மூலம் பேமஸ் ஆனவர் பிரவீனா. மலையாள நடிகையான இவர், அந்த சீரியலில் ஹீரோவின் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் சீரியலைப் போல் சினிமாவிலும் கோமாளி, வீட்ல விசேஷம், சாமி ஸ்கொயர், டெடி போன்ற திரைப்படங்களில் அம்மா வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். மலையாளத்திலும் பல்வேறு சீரியல்களில் நடித்து மாநில அரசின் விருதையும் இவர் வென்றிருக்கிறார்.

24

நடிகை பிரவீனா, கடந்தாண்டு சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சிலர் இணையத்தில் பரவவிட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், பாக்யராஜ் என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஷாஹித் கபூருடன் நடித்துள்ள 'ஃபார்ஸி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

34

கைதான பின் சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பாக்யராஜ், பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே கடந்த சில வாரத்துக்கு முன்னர் மீண்டும் சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்துள்ள நடிகை பிரவீனா, தனது புகைப்படங்கள் மட்டுமின்றி தனது மகளின் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி அதில் பதிவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

44

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பாக்யராஜ் என்பவர் தான் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் பாக்யராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கல்லூரி மாணவர் என்றும், அவருக்கு 22 வயதே ஆவதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில், ‘ஜெய்பீம்' நூலாக வெளியாகிறது!

click me!

Recommended Stories