தேர்தலில் மீனாவை டம்மி பீஸ் ஆக்க சிந்தாமணி கையிலெடுக்கும் ஆயுதம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

Published : Apr 04, 2026, 09:50 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தேர்தலில் மீனாவை தோற்கடிக்க, இலவசங்களை வாரி வழங்கி, நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் சிந்தாமணியை எதிர்த்து போட்டியிடும் மீனா, பிரச்சாரத்திற்காக நோட்டீஸ் அடித்து அதை பூ வியாபாரிகள் அனைவரிடமும் நேரில் சென்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சிந்தாமணி தன்னுடைய காரில் வந்து இறங்குகிறார். அவர் தன்னுடைய ஆட்கள் மூலம் பெட்டி பெட்டியாக துணிகளை எடுத்து வந்து பூ வியாபாரிகளுக்கு கொடுக்கிறார். அவர்களும் இலவசத்தை பார்த்த உடனே, மீனா கொடுத்த நோட்டீசை கீழே போட்டுவிட்டு சிந்தாமணியிடம் சென்றுவிடுகிறார்கள்.

25
மீனா போடும் பிளான்

இதைப்பார்த்த மீனா மிகவும் கவலைப்படுகிறார். என்னடா நம்ம இவ்வளவு பாடுபட்டு, நோட்டீஸ் கொடுத்தால், அதைப் படிக்காமல் இவங்க இப்படி இலவசத்துக்காக அலையுறாங்களே என கவலைப்படுகிறார். இதையடுத்து ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் மீனா, அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசிக்கிறார். நம்மளும் மக்களுக்கு கொடுக்கணும், ஆனால் இதுபோன்ற இலவசங்கள் அல்லாமல், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவற்றை கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் ஸ்வேதா ஒரு ஐடியா கொடுக்க, ஸ்ருதியும் தன் பங்கிற்கு ஒரு ஐடியா தருகிறார்.

35
மீனாவுக்கு பெருகும் ஆதரவு

நான் எங்கவீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கெல்லாம் டியூசன் எடுக்கிறேன். உங்க சங்கத்தில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கும் டியூசன் ஃப்ரீயாவே எடுக்குறேன் என வாக்குறுதி கொடுக்கிறார் ஸ்வேதா. அதேபோல் ஸ்ருதியும், நான் 3 மாசத்துக்கு ஒருமுறை இலவசமாக மருத்துவ முகாம் நடத்துகிறேன். உங்க சங்கத்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகிறேன் என கூறுகிறார். பூ வியாபாரிகள் சங்கத்தில் இருப்பவர்களிடம் இதுமாதிரி சொல்லுங்க, அப்போ தான் உங்களுக்கு அவர்கள் மத்தியில் அதிகப்படியான ஆதரவு கிடைக்கும் என ரவி கூறுகிறார்.

45
சிந்தாமணியிடம் சண்டைபோடும் ரேகா

மீனாவுக்கும் இந்த ஐடியா பிடித்துப் போக, அவரும் சங்கத்தினரிடம் சென்று தான் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று சொல்லி பிரச்சாரம் செய்கிறார். அவரின் வாக்குறுதிகளை கேட்டதும் ஏராளமானோர் மீனாவுக்கு சப்போர்ட் பண்ண முன் வருகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ சிந்தாமணிக்கு தெரியவருகிறது. இதையடுத்து பணத்தை எடுத்து தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து, அந்த மீனா இந்த எலெக்‌ஷன்லயே நிற்க கூடாதுனு சொல்கிறார். அவர் மீனாவுக்கு எதிராக சதி செய்யும் விஷயத்தை எல்லாம் ரேகா பார்த்துவிடுகிறார். அவர் தன் அம்மாவிடம் சென்று சண்டை போடுகிறார்.

55
சதி செய்யும் சிந்தாமணி

நீ இந்த எலெக்‌ஷன்ல நிற்க கூடாது என சொல்கிறார். ஆனால் அதையெல்லாம் காது கொடுத்து கேட்காத சிந்தாமணி, இது என்னோட கெளரவ பிரச்சனை அதனால நான் கண்டிப்பா இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என கூறுகிறார். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது, நீ கண்டிப்பா இந்த எலெக்‌ஷன்ல ஜெயிக்க மாட்ட என சொல்லிவிட்டு ரேகா அங்கிருந்து கிளம்புகிறார். மீனாவுக்கு ஆதரவு பெருகுவதால் சிந்தாமணிக்கு பயம்வர ஆரம்பித்துவிட்டது. இதனால் மீனாவை இந்த தேர்தலில் நிற்கவிடக் கூடாது என பிளான் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories