மீனாவுக்கு சிந்தாமணி வைத்த செக் மேட்... விஜயாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்

Published : Apr 18, 2026, 03:32 PM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் தேர்தலில் வெற்றி பெற்று தலைவியான மீனாவுக்கு சிந்தாமணி மிகப்பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Unexpected Twist in Siragadikka Aasai Serial

சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை தேர்தலில் தோற்கடித்த மீனாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்கிற முனைப்போடு சுற்றிக் கொண்டிருக்கும் சிந்தாமணிக்கு அவரது மகள் ரேகா ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவர் மீனாவின் தம்பி சத்யாவை காதலிக்கும் விஷயம் சிந்தாமணிக்கு தெரியவந்ததோடு, அவர் சத்யாவும் ரேகாவும் ஜோடியாக ஊர் சுற்றியபோது அதை போட்டோ எடுத்து வைத்துள்ளார். இதன்பின்னர் நேராக ரேகாவின் அப்பாவை அவரது ஆபிஸுக்கு சென்று சந்தித்து பேசிய சிந்தாமணி, போட்டோ ஆதாரத்துடன் ரேகாவின் காதல் விவகாரத்தை போட்டுடைத்துள்ளார்.

25
செக் வைக்கும் சிந்தாமணி

மீனாவுக்கு சத்யா காதலிக்கும் ரேகா சிந்தாமணியின் மகள் என்கிற உண்மை தெரிந்ததும் அவர் என்னால் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என சொல்லிவிட, பின்னர் முத்து தான் அவரிடம் பேசி சமாளித்து அவர்களின் காதலை சேர்த்துவைக்க சொல்கிறார். சிந்தாமணி மீனாவை பழிவாங்க, ரேகாவின் காதலை ஒரு பகடைக் காயாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நீ பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவி பதவியில் இருந்து விலகினால், உனது தம்பி சத்யாவுக்கு என்னுடைய மகள் ரேகாவை திருமணம் செய்துவைக்க ஒப்புக் கொள்கிறேன் என்று மீனாவுக்கு செக் மேட் வைக்கவும் வாய்ப்பு உள்ளது.

35
மீனா எடுக்கும் முடிவு

தம்பியின் காதலுக்காக மீனா தன்னுடைய பதவியை தூக்கி எறிவாரா என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. தன்னுடைய சுயநலத்துக்காக தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாக இது அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு மீனா சிந்தாமணியின் டீலிங்கை ஏற்க மறுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் ரேகாவும் தன்னுடைய காதலில் ஸ்ட்ராங் ஆக இருப்பதால், முத்துவின் உதவியோடு சிந்தாமணியையும் அவருடைய கணவரையும் மீறி ரேகாவை தூக்கி வந்து சத்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

45
மனோஜுக்கு சிக்கல்

அதேபோல் விஜயாவுக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. விஜயா தன்னுடைய மகன் மனோஜுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் பெண் கிடைத்திருக்கிறது என்கிற குஷியில் இருக்கிறார். அதுமட்டுமின்றி ரோகிணியிடம் டைவர்ஸ் வாங்காமலேயே மனோஜுக்கும் ஹரிணிக்கும் திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது ரோகிணிக்கும் தெரியவந்துள்ளது. ரோகிணி பார்லருக்கு ஹரிணி சென்றிருந்தபோது அவர், ரோகிணி போனில் மனோஜ் வால்பேப்பர் இருந்ததை பார்த்து கேட்க, அதற்கு ரோகிணி தான் மனோஜின் முதல் மனைவி என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார்.

55
கவலையில் விஜயா

ஏற்கனவே சாப்பிட சென்றபோது மனோஜின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து அப்செட் ஆன ஹரிணிக்கு தற்போது ரோகிணி மேட்டரும் தெரிந்துவிட்டதால், அவர் மனோஜ் உடனான திருமணத்தை பாதியில் நிறுத்தும் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் தன்னுடைய மகனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்க்க வேண்டும் என்கிற விஜயாவின் ஆசை மண்ணாய் போய் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் ரோகிணி தான் என்கிற உண்மையும் தெரியவந்தால், விஜயா பத்ரகாளியாக மாறிவிடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் அடுத்த வார எபிசோடுகள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories