Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்

Published : Jun 21, 2026, 12:09 PM IST

Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டிற்கு சென்றுள்ள சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை வைத்து முத்து, மீனாவை மிரட்டி இருக்கிறார். இதை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Twist

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பி சத்யாவும் சிந்தாமணியின் மகள் ரேகாவும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் காதலுக்கு சிந்தாமணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்களை சேரவே விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார். மறுபுறம் அவர்களை எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என முத்து மீனாவும் முயற்சித்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக ரேகாவை சிந்தாமணிக்குத் தெரியாமல் தங்கள் பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார் முத்து. தன் மகளை முத்து தான் கடத்திச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்த சிந்தாமணி போலீசில் புகார் கொடுத்திருந்தார். 

Siragadikka Aasai : முத்து - மீனாவை பழிவாங்க துடிக்கும் சிந்தாமணி... ரோகிணியின் சதியை கண்டுபிடித்தாரா விஜயா?

24
முத்துவை அடிக்க ஆள் அனுப்பும் சிந்தாமணி

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் ஆக்சன் எடுப்பதற்குள் ரேகா தன்னை யாரும் கடத்த வில்லை எனக் கூறி வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியானது. இதனால் முத்துவை எதுவும் செய்ய முடியாது என போலீஸ் கை விரித்து விட்டது. போலீஸ் இல்லை என்றால் என்ன நானே களத்தில் இறங்குகிறேன் எனக் கூறி சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை ஏவி விட்டு முத்துவையும் மீனாவையும் ஃபாலோ பண்ண சொல்கிறார். ஒரு கட்டத்தில் விஜயாவின் வீட்டுக்கு தன்னுடைய அடியாட்களை அனுப்பி பிரச்சனை பண்ணுகிறார் சிந்தாமணி. அந்த அடி ஆட்கள் உள்ளே சென்று முத்து இடம் சண்டை போடுகிறார்கள். 

34
சிந்தாமணியை வெளுத்து வாங்கும் விஜயா

பின்னர் அங்கு வரும் சிந்தாமணி என் பொண்ணு எங்கடா என முத்துவிடம் கேட்கிறார். அப்போது குறுக்கிடும் விஜயா உன் பொண்ணு எவன் கூடையோ ஓடிப் போனா இங்க வந்து கேட்பியா என பதிலடி கொடுக்கிறார். நான் நெனச்சா உங்க குடும்பத்தையே இல்லாம பண்ணிருவேன் என மிரட்டுகிறார் சிந்தாமணி. இதற்கெல்லாம் அசராத முத்து, ஆசைப்பட்ட ரெண்டு பேர சேர்த்து வைக்கிறோம் அவ்வளவுதான், உன்னால என்ன செய்ய முடியுமோ பாத்துக்கோ என சவால் விடுகிறார். என் பொண்ணுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். நான் அந்த சத்யாவையும் என் பொண்ணையும் சேர விடமாட்டேன் என திமிராக கூறுகிறார் சிந்தாமணி. 

44
சவால்விட்ட சிந்தாமணி

அப்போது சிந்தாமணியிடம் நீ எனக்கு செஞ்ச துரோகத்துக்காக தான் இப்படி எல்லாம் அனுபவிக்கிற என கூறுகிறார் விஜயா. என்னை மீறி என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்தை நீ எப்படி நடத்துறேன்னு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார் சிந்தாமணி. இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? சிந்தாமணியை மீறி சத்யாவையும் ரேகாவையும் சேர்த்து வைப்பாரா முத்து? சத்யா ரேகாவின் கல்யாணம் நடக்குமா? இல்லையெனில் சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை வைத்து இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories