கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டோட மாப்பிள்ளைக்காக மாமியார் காலில் விழுந்த மாப்பிள்ளை!

Published : Nov 14, 2025, 06:18 PM IST

கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டோட மாப்பிள்ளையாக வர எல்லா கண்டிஷனுக்கும் ஓகே சொல்லி மாமியார் காலில் மயில்வாகனம் விழுந்துள்ளார்.

PREV
18
மயில்வாகனம் மற்றும் ரோகிணி

கார்த்திகை தீபம் 2 சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு சீரியலின்படி ஒவ்வொரு கதை சொல்லப்பட்டுள்ளது. தனது அத்தை மற்றும் பாட்டியின் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்க கார்த்திக் டிரைவராக நடித்து வருகிறார். ரேவதி மகேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவருக்கு அவரது அண்ணியுடன் தொடர்பு இருப்பது தெரிந்து கார்த்திக் எத்தனையோ முறை சொல்லியும் அதையெல்லாம் ரேவதி கேட்கவில்லை.

28
மயில்வாகனம் மற்றும் ரோகிணி பிளாஷ்பேக் சீன்

கடைசியில் சாமுண்டீஸ்வரிக்கு அந்த உண்மை தெரிந்து கார்த்திக் மற்றும் ரேவதிக்கு திருமணம் செய்து வைத்தார். அம்மாவின் கட்டாயத்தில் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்ட ரேவதி காலப்போக்கில் மகேஷ் பற்றியும், கார்த்திக் யார் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டார். இப்போது கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பு கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

38
கார்த்திகை தீபம் 2 சீரியல் கும்பாபிஷேகம் புரோமோ வீடியோ

ஆனால், யார் யார் மீது அதிக காதல் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு போட்டி நடந்தது. அதில், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் கலந்து கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டும். இதில் யாரேனும் கண்ணை சிமிட்டினாலோ அல்லது வேறு பக்கம் திரும்பினாலோ அவர்கள் அவுட். இந்த போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார்.

48
கார்த்திக், ரேவதி

அப்போது மயில்வாகனம் உள்பட சாமுண்டீஸ்வரி, ரோகிணி, சந்திரகலா, ராஜ ராஜன் என்று எல்லோரும் இருந்தனர். இதில் மயில்வாகனம் அதிகமாக பேச, அவரைப் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரி சொன்னார். அதில் திருமண நிச்சயத்திற்கு முன் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். அதில், ரோகிணியை பெண் பார்க்க வந்த மயில்வாகனத்திடம் சாமுண்டீஸ்வரி அடுக்கடுக்காக பல கண்டிஷன் போட்டார்.

58
ஜீ தமிழ் சீரியல்

அதில், வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், கரண்ட் பில், கோர்ட் கேஸ் போன்றவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும், பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கண்டிஷன் போட்டார். இதற்கு ஒட்டு மொத்தமாக மயில்வாகனம் சாமுண்டீஸ்வரி காலில் சாஸ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு தான் மயில்வாகனம் மற்றும் ரோகிணி திருமணம் நடைபெற்றது.

68
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு

அப்போது மயில்வாகனம் உள்பட சாமுண்டீஸ்வரி, ரோகிணி, சந்திரகலா, ராஜ ராஜன் என்று எல்லோரும் இருந்தனர். இதில் மயில்வாகனம் அதிகமாக பேச, அவரைப் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரி சொன்னார். அதில் திருமண நிச்சயத்திற்கு முன் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். அதில், ரோகிணியை பெண் பார்க்க வந்த மயில்வாகனத்திடம் சாமுண்டீஸ்வரி அடுக்கடுக்காக பல கண்டிஷன் போட்டார்.

78
கார்த்திகை தீபம் 2 சீரியல்

அதில், வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், கரண்ட் பில், கோர்ட் கேஸ் போன்றவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும், பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கண்டிஷன் போட்டார். இதற்கு ஒட்டு மொத்தமாக மயில்வாகனம் சாமுண்டீஸ்வரி காலில் சாஸ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு தான் மயில்வாகனம் மற்றும் ரோகிணி திருமணம் நடைபெற்றது.

88
சாமுண்டீஸ்வரி

இதை சாமுண்டீஸ்வரி சொல்லவே அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அடுத்த காட்சியாக கார்த்திக் தன் மீது எந்தளவிற்கு காதல் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரேவதி, கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஹனிமூன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். அங்கு, மலை மேகங்களுக்கு நடுவில் இருவரும் ஒன்றாக நீண்ட தூரம் நடக்க வேண்டும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்து பேச வேண்டும் என்று இப்படி பல ஆசைகளை ரேவதி கார்த்திக்கிடம் கூறினார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories