பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து 35 நாட்களில் எலிமினேட் ஆன பிரஜன் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பதை பற்றி இங்கே காணலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில், தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் 5 பேர் மட்டுமே பைனலுக்கு செல்வார்கள். அவர்கள் யார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஏனெனில் இந்த சீசனில் நன்றாக விளையாடும் போட்டியாளர்களைக் காட்டிலும் வில்லங்கமான போட்டியாளர்கள் தான் தொடர்ச்சியாக தப்பித்து வருகிறார்கள். குறிப்பாக பார்வதிக்கு அதிகளவில் எதிர்ப்புகள் வந்தாலும் அவர் அதிகப்படியான வாக்குகளை வாங்கி வருகிறார்.
24
எலிமினேட் ஆன பிரஜன்
இந்த சீசனில் நிறைய அன்ஃபேர் எவிக்ஷன் நடைபெற்று இருக்கிறது. ஆதிரை, பிரவீன் ஆகியோரின் எவிக்ஷன் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நடந்த ஒரு அன்ஃபேர் எவிக்ஷன் தான் பிரஜனுடையது. அவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். பிரஜனின் எவிக்ஷனால் மனமுடைந்துபோன அவரது மனைவி சாண்ட்ரா, பிரஜனுக்கு முன்னதாகவே பிக் பாஸ் வீட்டின் கதவு வாயிலாக வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
34
பாராட்டுடன் வெளியேறிய பிரஜன்
பின்னர் சாண்ட்ராவை ஆறுதல் படுத்தி உள்ளே அழைத்துவந்து விட்டுவிட்டு வெளியே சென்றார் பிரஜன். பின்னர் மேடைக்கு சென்றது தன்னுடைய நண்பனாக விஜய் சேதுபதியிடம் டேய் மச்சான் என ஜாலியாக பேசினார் பிரஜன். முந்தைய வாரங்களைக் காட்டிலும் கடந்த வாரம் தான் பிரஜனின் கேம் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. விஜய் சேதுபதியே அதனை பாராட்டி இருந்தார். ஆனால் போதுமான வாக்குகள் கிடைக்காததால், அவர் இந்த வாரம் எலிமினேட் ஆனார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிரஜன் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் என்றால் அது பிரஜன் தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அவர் மொத்தம் இருந்த 35 நாட்களுக்காக அவருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். இந்த சீசனில் இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் அதிக சம்பளத்துடன் எவிக்ட் ஆன போட்டியாளர் பிரஜன் என்பது குறிப்பிடத்தக்கது.