
விஜய் டிவியில் தற்போது அனல் பறக்க ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 எவிக்ஷன் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 வாரத்தைக் கடந்த நிலையில் இந்த வாரத்தின் எலிமினேஷன் முன்னாள் காதல் ஜோடியாக இருந்த இருவர் தான் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
ஹிப் ஹாப் கலைஞர் ஆன FJ இந்த வீட்டிற்குள் ஒரு கண்டஸ்டாண்ட்ஸாக வந்தார். கவரும் அழகும், அடாவடி பேச்சும் இருப்பதால் முதலில் ஆதிரை எஃப்ஜேயின் காதல் வலையில் விழுந்தார். அவர் சரியாக விளையாடாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேற அதன் பிறகு வியன்னா அந்த காதலில் விழுந்தார். இதனை நெட்டிசன்களும் விஜய் சேதுபதியும் விமர்சிக்க இரண்டு பேரும் விலகிக் கொண்டனர். அதன் பிறகு எஃப்ஜேயின் எக்ஸ் காதலியான ஆதிரை உயில் கார்ட் கண்டஸ்டண்டாக வீட்டுக்குள் இறங்க இந்த விளையாட்டு சூடிக்கொடுத்தது இருவருக்கும் சண்டே ஏற்பட்டபோது வியாணா அமைதியாகவே இருந்து வந்தார்.
அதன் பிறகு அந்த வார இறுதியில் வியாணா எலிமினேட்டாக, இவர்கள் இருவரும் நல்ல நண்பராக இருக்க மீண்டும் தொடங்கினர். ஆதிரைக்கு எந்த பிரச்சனையும் வந்தாலும் அதற்கு முதலாவதாக எஃஜேயே போய் நின்றார். கேமிலும் கூட அவர்தான் அவருக்கு சப்போர்ட் ஆளாகவும் இருந்து வந்தார். இப்படி இருக்க தற்போது இருவரும் எழுமினேட் ஆக இருப்பது அவருக்கு கூட ஷாக் ஆக தான் இருக்கும். "என்னால நீ கெட்ட உன்னால நான் கேட்டேன்"என்று மாற்றி மாற்றி இருவரும் தனது விளையாட்டையும் எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து எழுமினேட் ஆகியுள்ளனர் என்பதை நெட்டிசன்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
ஆதிரை:
முதலில் வீட்டுக்குள் வந்த அதிரை சரியாக விளையாட்டை விளையாடாத காரணத்தாலும் மக்களிடையே அதிக பாயிண்ட்ஸ் பெறாததாலும் வீட்டை விட்டு வெளியேறினார் அதன் பிறகு ஒயிட் கார்ட் கண்டஸ்டன்ஸாக மீண்டும் வீட்டுக்குள் வந்தார் ஆதிரை. அவர் விளையாட்டை சரியாக விளையாடி இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக எண்ணிக்கை பெறாத காரணத்தினால் தற்போதும் அவர் வீட்டை விட்டு வெளியேற உள்ளார். இந்த டான்ஸ் மாராத்தான் போட்டியில் ஆதிரை அம்மா வீட்டுக்குள் வரவேண்டும் என்று அவர் வைத்த கருத்து அனைவரும் ஒப்புக்கொண்டதால் இந்த வாரத்தில் அவர்கள் அம்மா வீட்டுக்கு வருவதாக இருப்பதை கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் எலிமினேட் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறதாக கூறப்படுகிறது. இதற்கு "பருத்தி முட்டை குடோனிலிலே இருந்திருக்கலாம்."என்று வருகின்றனர். அவரை விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
சாண்ட்ரா எலிமினேஷன்:
தற்போது சான்றா மிகவும் கோபமாகவும் மற்றவர்கள் மீது எரிந்து எறிந்து விழுவதால் அவுட்சியர்ஸ் மத்தியில் பெரும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை விஜய் சேதுபதியின் எபிசோடான நேற்று அவரை இது என்ன உங்க வீடா உங்க இஷ்டத்துக்கு இருக்கணும் என்றெல்லாம் அவரை கோபமாக கேள்விகளை எழுப்பினார் அதற்கு ஒன்றும் பேசாமல் சான்றா அமைதியாகவே இருந்து வந்தார் என் தப்பை நான் உணர்ந்து கொண்டேன் என்றெல்லாம் கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால் சான்றா இந்த வாரம் எரிக்ஷனில் வெளியேறிக்கலாம் என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சான்ரா எஸ்கேபி ஆகி உள்ளார் என்னும் விமர்சனத்தையும் பெற்றுள்ளார். அவர் இந்த காலத்தில் டாஸ்கே ஒழுங்காக செய்யாதாகவும் வீட்டில் வேலைகளை ஒழுங்காக சரியாக இருப்பதும் ரசிகர் மத்திலியும் அவுட்ஸ்மேன் மத்தியிலும் பெரும் கவலையை உண்டாக்கியது. தற்போது அவர் வீட்டை விட்டு வெளியேறுக்கலாம் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தப்பித்துவிட்டார் என்பதும் இதில் விமர்சனாமாகவும் வெளி வருகிறது.
பார்வதி அம்மா:
இந்த வாரத்தில் நடந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அணியிலிருந்து ஒரு குடும்பத்தினர் வீட்டிற்குள் 24 மணி நேரம் இருக்கலாம் என்று பிக் பாஸ் கூறினார். ஆதிரை என் அம்மா வரலாம் என்று அவர் கருத்தை எடுத்து வைக்க, பார்வதி என் அம்மா வரவேண்டும் என்று சொல்ல உன் அம்மா வந்தால் உன்னை சரமாரியாக கேள்வி எழுப்புவார் என்று அவுட் ஸ்னேக்ஸ் இடையில் சிறிய வாக்குவாதம் ஒன்று நடைபெற்றது. அதன் பிறகு ஆதிரை அம்மா வரலாம் என்ற முடிவு எடுத்து கூறப்பட்டது.
தற்போது அவர் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு வெளியேறுவதால் பார்வதி அம்மா வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்தால் பார்வதிக்கும், கம்ரூதினுக்கும் என்ன நடக்கப் போகிறது. இவர்கள் என்ன எல்லாம் பேசப்போகிறார்கள் என்று ரசிகர் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது இந்த வாரத்தில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.