Saravanan Sends Divorce Notice to Thangamayil : "தங்கமயிலுக்கு ஆப்பு வைத்த சரவணன்!" – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் தொடர் பொய்களால் பொறுமை இழந்த சரவணன், தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு இடையிலான குடும்ப பிரச்சனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. படிப்பு, வேலை மற்றும் வயசு என்று அடுக்கடுக்காக பொய் சொல்லி மாட்டிக்கொண்ட தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் வீட்டிற்கு சொல்லவே, அவர் வீட்டைவிட்டு துரத்தப்பட்டார். மேலும், தன்னை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தர்ணா போராட்டம் வேறு நடத்தினார்
25
Saravanan Sends Divorce Notice to Thangamayil
ஆனால், சரவணன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் தங்கமயிலின் அப்பா மாணிக்கம் வீட்டு கதவை திறக்க சொல்லி சவுண்ட் கொடுத்த நிலையில், சரவணன் கேட்ட கேள்வியால் ஆடிப்போனார். திருடுவதற்கு மானம் போகவில்லை, பொய் சொன்னது அவமானமாக தெரியவில்லை, ஆனால், நான் கேட்பது மட்டும் அவமானமாக இருக்கிறதா? என்று கேட்டார். இனிமேலும், இவர்களை வீட்டிற்குள் சேர்த்தால் நம் அனைவரையும் வெளியில் துரத்திவிட்டுவிடுவார்கள் என்று கோமதி பயந்தார்.
35
Pandian Stores 2 Serial Latest Twist
கடைசி வரை தங்கமயில் மட்டுமின்றி அவரது அப்பா, அம்மா யாருமே வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. கடைசியாக சரவணன் தனது அப்பாவிடம் ஒன்னே ஒன்னு கேட்டார். அதாவது தனக்கு இவளுடன் வாழ விருப்பமில்லை. இவள் பண்ண எதையும் தன்னால் மறக்க முடியாது. அதனால், இவளிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கேட்டார்.
45
Vijay TV Serial Today Episode Highlights
இந்த நிலையில் தான் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டது. இதில், சரவணன் தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அதை வாங்கிய தங்கமயில், உண்மையில் தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்து விட்டார்கள் என்று கூறி கதறி அழுதார். சரவணன் தனது முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் இனி இவர்கள் சேர்த்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
ஏற்கனவே பொய் சொன்னதோடு, குடும்பத்தை இவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தியாச்சு. பற்றாக்குறைக்கு இப்போது தங்கமயிலின் அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு வேறு சென்று வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் போது தங்கமயிலின் 80 சவரன் நகை மேட்டர் வெளியில் வரும் என்று தெரிகிறது. இதில் 8 சவரன் மட்டுமே தங்கம், மீதம் உள்ள 72 சவரன் நகை எல்லாம் கவரிங்.
55
Thangamayil Lies Exposed in Pandian Stores 2
இதைப் பற்றிய உண்மை ஏற்கனவே ராஜீ மற்றும் மயிலுக்கு தெரிந்த நிலையில் கடைசியாக கதிருக்கும் தெரிந்துவிட்டது. பாக்கியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், கதிர், சரவணன், கோமதி, அரசி மற்றும் ராஜீ ஆகியோர் போலீசாரால் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இப்படி எல்லாம் நடந்த பிறகு எப்படி தங்கமயில் உடன் சரவணன் சேர்ந்து வாழ்வார்? இனிமேல் அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.