
ஒவ்வொரு நாளும் கார்த்திகை தீபம் சீரியலின் புரோமோ வீடியோ வெளியான போது ரசிகர்கள், இனிமேல் இந்த சீரியலை பார்க்க கூடாது. தயவு செய்து கார்த்திக்கை அப்படி காட்டாதீர்கள். இந்த சீரீயலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், மீண்டும் கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்கள், அபிராமி இறந்ததற்கு பதிலாக சாமுண்டீஸ்வரி இறந்திருக்கலாம் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.
தனது தாத்தா மற்றும் அத்தையின் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்க கார்த்திக் டிரைவராக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அத்தை சாமுண்டீஸ்வரியின் நம்பிக்கையை பெற்று கடைசியில் அவரது 2அவது மகள் ரேவதியை திருமணமும் செய்து கொண்டார். ஆரம்பத்தில் ரேவதிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடில்லை என்றாலும் கூட காலப்போக்கில் கார்த்திக் யார் என்ற உண்மையை தெரிந்து கொண்டு பின்னர் அவரை காதலிக்க ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டனர். ஆனால், அப்போதுதான் கார்த்திக் தாஅன் யார் என்ற உண்மையை சொல்ல முடிவெடுத்தார். அதற்குள்ளாக கோயில் கும்பாபிஷேகம் வரவே, அதை முடித்துக் கொண்டு உண்மையை சொல்லலாம் என்று இருந்தார். அதற்குள்ளாக காளியம்மாள் கோயிலில் வெடிகுண்டு வைத்து கார்த்திக்கை உண்மையை சொல்ல கண்டிஷன் போடவே அவரும் உண்மையை சொல்லிவிட்டார். பின்னர் கார்த்திக் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். தனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக சாமுண்டீஸ்வரிக்கு எதிரியானார்.
காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல் ஆகியோருடன் 4ஆவது எதிரியாக இப்போது கார்த்திக்கும் சாமுண்டீஸ்வரியின் பட்டியலில் இணைந்துவிட்டார். கிராமத்து ரோலுக்காக எப்போதும் ஒரே மாதிரியாக காஷ்டியூம் அணிந்து கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வந்தவர் தான் கார்த்திக். இதற்காக எப்போதும் வேஷ்டி சட்டையில் மட்டுமே வலம் வந்தார். ஒரு நாள் கூட அவர் பேண்ட் சட்டை அணிந்தது இல்லை. ரேவதி உடனான திருமணத்திற்கு பிறகும் கூட வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த கார்த்திக் எப்போதும் வேஷ்டி சட்டையில் தான் இருந்தார்.
சமீப காலமாக சீரியலில் நடக்கும் காட்சிகளை வைத்து ரசிகர்கள் பலரும் கார்த்திக்கிற்கு ஆதரவாக கமெண்ட்ஸ்களை விமர்சனங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வச்சிருந்தாங்க. ஆனால், இப்போது ஒரே ஒரு சீனில் மொத்த ரசிகர்களும் வாயடைத்து போய்ட்டாங்க. அந்தளவிற்கு கார்த்திக்கின் காட்சி மட்டுமின்றி அவரது காஸ்டியூமும் மாறிவிட்டது. அப்படி எப்படி ஒரே நாளில் காட்சி மாறியது என்று நீங்கள் கேட்கலாம்.
கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொன்ன பிறகு அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளாம். அவர் அவமானப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர்கள் அவருக்காக குரல் எழுப்பினர். கார்த்திக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்போதும் போன்று அமைதியாகவே இருந்தார். கார்த்திக் உண்மையை சொல்லவே கும்பாபிஷேகம் நின்றது. ரேவதியை பிரியும் நிலை வந்தது. வீட்டை விட்டும் துரத்தப்பட்டார். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டார்.
இப்படி அடுத்தடுத்து அவமானங்களை சந்தித்தார். இந்த நிலையில் தான் கார்த்திக் வெளியில் வர வேண்டுமென்றால் அவருடனான திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று சாமுண்டீஸ்வரி கண்டிஷன் போட்டார். வேறு வழியில்லாமல் ரேவதியும் சம்மதம் தெரிவிக்க, காசு வெட்டிப் போட்டு கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் பிரிந்தனர். கார்த்திக்கின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத ரேவதி விஷம் அறிந்து தற்கொலைக்கும் முயற்சி செய்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார். இதையடுத்து கார்த்திக் ரேவதியை சந்தித்து இனிமேல் இப்படி செய்யக் கூடாது என்று கண்டித்தார். மேலும், சத்தியமும் வாங்கி கொண்டார். சிகிச்சைக்கு பிறகு ரேவதி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் கார்த்திக்கிற்கு செங்கல் சூளை ஏலம் விடப்படுவது குறித்து தெரிந்து தனது மேனேஜரை ஏலம் எடுக்க சொல்லியிருக்கிறார்.
கார்த்திக் ஏற்கனவே சென்னையில் பிஸினஸ் செய்தவர். பல நிறுவனங்களுக்கு ஓனர். அப்படியிருக்கும் போது இது வெறும் செங்கல் சூளை தான். ஆதலால் அதை எடுக்காமல் விட்டுவிடுவாரா? சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவிற்கு தெரியாமலே அவரும் மேனேஜரை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோவில் செங்கல் சூளை ஏலத்தின் ஆரம்ப விலை ரூ.50 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது.
அதன் பிறகு ரூ.55 லட்சம், ரூ.65 லட்சம், ரூ.85 லட்சம், ரூ.90 லட்சம், ரூ.95 லட்சம் என்று கேட்டுக்கொண்டே வர கடைசியாக ரூ.1 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்தார். அதைக்கேட்டு சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். மேலும், அந்த தொகையே கடைசியாக உறுதி செய்யப்பட்டது. நான் மேனேஜர் தான். எங்களுடைய பாஸ் இப்போது வருவார் என்று அவர் சொல்லவே ஆடி காரில் காரில் பேண்ட் சர்ட்டில் சும்மா கெத்தா, கம்பீரமாக வந்து இறங்குகிறார். அப்போது அஜித்தின் வீரம் ரத கஜ துராதி பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம் என்ற பாடல் ஒலிக்க செய்யப்படுகிறது.
அதோடு புரோமோ வீடியோ முடிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த மாதிரி தான் நாங்கள் கார்த்திக்கை பார்க்க ஆசைப்பட்டோம். நாங்க எதிர்பார்த்தது இந்த மாஸ் கார்த்தியை தான், வந்துட்டாரா எங்க ஹீரோ, இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம், சாமுண்டீஸ்வரி சந்திரகலா ரியக்சன் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். கார்த்திக்கின் எண்ட்ரி சீன் தான் கார்த்திகை தீபம் சீரியலின் சிறந்த சீன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த எபிசோடில் தான் ஏலம் எடுத்த அதெ செங்கள் சூளையை அவருக்கே திரும்பி கொடுத்தார். ஆனால், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது காதலை பரிமாறிக் கொண்டனர்.