எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை தொடங்கவிடாமல் தடுக்க களத்தில் இறங்கி உள்ளார். இதனால் அடுத்த வாரம் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. தர்ஷன் - பார்கவி திருமணம், ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோ, சக்தி கடத்தல், ஆதி குணசேகரன் தலைமறைவு என பல்வேறு ட்விஸ்டுகளுடன் சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது ஆதி குணசேகரன் எப்போது கைதாவார் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் கதைக்களம் அதற்கு உல்டாவாக சென்றுகொண்டிருக்கிறது. தலைமறைவாக இருந்தாலும் ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை தொடங்கவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் ஆதி குணசேகரன், அடுத்தக்கட்ட ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார்.
24
சக்திக்கு ஏற்படும் பயம்
ஜனனி, ஆதி குணசேகரனை மீறி பிசினஸ் தொடங்க உள்ள நிலையில், சக்திக்கு ஒருவித பயம் வருகிறது. ஆளவச்சு கடத்தி, அடிச்சு என்னை துன்புறுத்தினார்கள். எனக்கே இப்படியென்றால், நீங்கெல்லாம் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிக்க போறீங்க, அவர் சும்மா விடுவாருனு நினைக்குறியா... இந்த தமிழ் சோறு பிசினஸ் திறப்பு விழாவை ஒரு இரண்டு நாள் மட்டும் தள்ளிப்போட முடியுமா என ஜனனியிடம் கேட்கிறார் சக்தி. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஜனனி, நம்ம மொத்தமா அழிஞ்சாலும் பரவாயில்ல சக்தி, இந்த வாட்டி அவரை விடக்கூடாது, நம்ம பிசினஸை நடத்தியே ஆகவேண்டும் என திட்டவட்டமாக கூறுகிறார்.
34
ஜனனிக்கு ஸ்கெட்ச் போட்ட ஆதி குணசேகரன்
மறுபுறம் ஆதி குணசேகரனால் ஜனனிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. கதிர் செட் பண்ணிய ரெளடிகளிடம் என்ன செய்ய வேண்டும் என பிளான் போட்டு கொடுக்கும் ஆதி குணசேகரன், இனி அவளுகளால ஒரு மண்ணும் திறக்க முடியாது என சொல்கிறார். திறப்பு விழா, இறப்பு விழாவாக மாறப்போகிறது என சொல்கிறார். இதைக்கேட்டு கரிகாலன் மற்றும் கதிர் சந்தோஷப்பட்டாலும், ஞானம் ஒருவித பயத்துடனேயே இருக்கிறார். ஜனனியின் தமிழ் சோறு பிசினஸ் திறப்பு விழாவை நடக்கவிடாமல் செய்ய ஆதி குணசேகரனின் ஆட்கள் மதுரைக்கு கிளம்பி செல்கிறார்கள்.
ஆதி குணசேகரனால் ஜனனிக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, வீட்டுக்கு வரும் கொற்றவை, ஜனனியிடம் நாளைக்கு கடை திறக்கபோகும் நேரத்தில், லோக்கல் ஸ்டேஷனில் இருந்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு வச்சிக்கோங்க. எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் என கூறுகிறார். ஆனால் ஜனனி அதெல்லாம் வேண்டாம் மேம் என சொல்லி போலீஸ் பாதுகாப்பை ஏற்க மறுக்கிறார். இனி ஜெயிக்கப்போவது ஆதி குணசேகரனின் பகையா? அல்லது ஜனனியின் தைரியமா? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.