எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனிடம் இரவில் அத்துமீறி நடந்துகொண்ட அன்புக்கரசியை, தரதரவென இழுத்து வந்து செம அடி கொடுத்திருக்கிறார் தர்ஷினி. அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவியின் திருமணத்தை செல்லாதது போல் ஆக்கிய ஆதி குணசேகரன், அன்புக்கரசிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி பதிவு செய்திருக்கிறார். இதுதவிர அறிவுக்கரசியையும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளார் ஆதி குணசேகரன். ஜனனி வீட்டில் இல்லாத நேரத்தில் எண்ட்ரி கொடுத்துள்ள அறிவுக்கரசியால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடிக்கின்றன. இதனிடையே தர்ஷன் பெயரில் தன் சொத்துக்களை எல்லாம் எழுதித்தருவதாகவும் கூறி இருக்கிறார் அறிவு. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனிடம் எல்லைமீறிய அன்புக்கரசி
அன்புக்கரசி உடன் வாழ்வதைப் பற்றி இரவு முழுவதும் யோசித்து தனக்கு காலையில் முடிவு சொல்லுமாறு தர்ஷனிடம் சொல்லி இருக்கிறார் ஆதி குணசேகரன். இதையடுத்து ரூமுக்குள் சென்ற தர்ஷன், தலைவலியால் அவதிப்பட அவனுக்கு மாத்திரை ஒன்றை கொண்டு வந்து கொடுக்கிறார் அன்புக்கரசி. அந்த மாத்திரையை வாங்கி போட்டுக்கொண்டு தூங்கிவிடுகிறார் தர்ஷன். அவர் தூங்கிய பின்னர், தர்ஷனுக்கு கண்ணாடியை மாட்டிவிட்டு, தன்னுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்ஃபி எடுத்து வைத்துக் கொள்கிறார் அன்புக்கரசி. இதையடுத்து காலையில் வீட்டில் பூகம்பமே வெடிக்கிறது.
34
அன்புக்கரசியை அலறவிட்ட தர்ஷினி
அன்புக்கரசி தனக்கு மயக்க மாத்திரை கொடுத்ததாக தர்ஷன் சண்டை போடுகிறார். இதையடுத்து கீழே இறங்கி வந்த தர்ஷினி, அன்புக்கரசியை அடிவெளுக்கிறார். பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த குணசேகரன், அறிவுக்கரசி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அப்போது அவதான் மாத்திரை கொடுத்தால் என்றால் அவனுக்கு எங்கடி போச்சு அறிவு என அறிவுக்கரசி கேட்கிறார். இதையடுத்து தன்னுடைய போனில் இருந்த புகைப்படங்களை எடுத்து காட்டுகிறார் அன்புக்கரசி. அதில் தர்ஷன் உடன் அவர் படுக்கையில் நெருக்கமாக இருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
குறிப்பாக பார்கவி, இந்த புகைப்படங்களை பார்த்து அப்செட் ஆகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு தர்ஷன் மீது வெறுப்பு வருகிறது. இதையடுத்து அழுதுகொண்டே மாடிக்கு செல்லும் பார்கவி, இவ்வளவு மோசமா பழிபோடுறாங்கனு தெரிஞ்சும், பேசாம இருப்பது சரியா என நந்தினியிடம் கேட்கிறார். அதுமட்டுமின்றி, இதுக்கான பதில் தர்ஷனை தவிர வேற யாராலையும் சொல்ல முடியாது என கூறிவிட்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? தர்ஷனை விட்டு பிரிய முடிவெடுக்கப்போகிறாரா பார்கவி? அன்புக்கரசியின் ஆட்டத்துக்கு முடிவுகட்டுவாரா தர்ஷன்? என்கிற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.