எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய ஆதி குணசேகரனை பழிவாங்க ஜெயிலில் இருந்தே அறிவுக்கரசி ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டிருக்கிறாராம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்கிய ஜனனி, பார்கவிக்கும், தர்ஷனுக்கும் வெற்றிகரமாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். சிங்கம் போல் இருந்த ஆதி குணசேகரன் இந்த திருமணத்துக்கு பின்னர் இடிந்துபோய் இருக்க, அவரை அவரது தம்பிகள் சமாதானப்படுத்தினர். ஆனால் தோற்ற சோகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஆதி குணசேகரன், தான் இத்தனை நாட்களாக மூடி மறைத்த உண்மைகள் அனைத்தையும் தன்னுடைய தம்பிகளிடம் போட்டுடைத்துவிட்டார். அதைக்கேட்ட பின்பும் அவர்கள் உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் என கூறிவிட்டனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
லெட்டரை தேடும் குணசேகரன்
ஆதி குணசேகரன் தன்னுடைய ரூமில் பல்வேறு ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கிறார். அவற்றை எல்லாம் சில நாட்களுக்கு முன்னர் சக்தி கண்டுபிடித்துவிட்டார். குறிப்பாக அவர் ஒளித்து வைத்த போனை எடுத்து வந்து அவரை மிரட்டி தான் தர்ஷன் - பார்கவி திருமணத்தை சக்தியின் உதவியோடு நடத்தி இருந்தார் ஜனனி. தன்னுடைய அறையில் இருந்து போனை எடுத்த சக்தி, வேறு என்னவெல்லாம் எடுத்துள்ளார் என்பதை செக் பண்ண பீரோவை திறந்து சோதனை நடத்தும் ஆதி குணசேகரன், தன்னிடம் இருந்த ஒரு பழைய லெட்டர் காணாமல் போன விஷயத்தையும் கண்டுபிடிக்கிறார். அந்த லெட்டரை படித்த பின்னர் சக்தி ஷாக் ஆனார். ஆனால் அதில் என்ன இருந்தது இதுவரை மர்மமாகவே உள்ளது. அநேகமாக அந்த லெட்டரிலும் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
34
அறிவுக்கரசியின் அடுத்த மூவ்
மறுபுறம் அறிவுக்கரசியை ஆதி குணசேகரன் ஜெயிலுக்கு அனுப்பிய விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என கதிர், தங்கள் தரப்பு வக்கீல் ஒருவரிடம் போன் போட்டு விசாரிக்கிறார். அறிவுக்கரசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதில் என்னையும், அண்ணனையும் மாட்டிவிட வாய்ப்பு இருப்பதாகவும் வக்கீல் சொல்லி இருக்கிறார். ஒருவேளை போலீஸ் காவலில் எடுத்துவிசாரித்தால் ஆதி குணசேகரன் பற்றிய அத்தனை உண்மைகளையும் அறிவுக்கரசி சொல்லிவிடுவார். இதனால் சீக்கிரமே ஆதி குணசேகரனையும் அலேக்காக தூக்கி செல்ல போலீஸ் வரும்.
தர்ஷன் - பார்கவிக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பது ஈஸ்வரியின் கனவாக இருந்தது. அதை நனவாக்கிய ஜனனி, அவர்களுக்கு திருமணம் முடிந்த கையோடு, ஆஸ்பத்திரிக்கு சென்று ஈஸ்வரியை பார்க்கிறார். அப்போது டாக்டர் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்கிறார். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவரின் உடல் ட்ரீட்மெண்டுக்கு ஒத்துழைக்கவில்லை என சொல்கிறார். இதைக்கேட்ட அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதனால் ஈஸ்வரிக்கு அடுத்து என்ன ஆகப்போகிறது? ஆதி குணசேகரனை போலீஸ் அரெஸ்ட் பண்ணுமா? தர்ஷன் - பார்கவியை வீட்டுக்குள் சேர்த்துக்கொண்டார்களா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.