சகுனி வேலை பார்த்த அறிவுக்கரசியை மடக்கிப்பிடித்த ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்

Published : Jan 09, 2026, 12:22 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸிற்காக தயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டில் அறிவுக்கரசி எதையோ கலக்க வந்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸுக்கு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வருகிறார் ஆதி குணசேகரன். இதனை விசாலாட்சிக்கு தெரியாமல் அனைவரும் மூடி மறைத்த நிலையில், நேற்று எல்லா உண்மைகளையும் அவரிடம் கொட்டிவிட்டார் நந்தினி. ஃபுட் டிரக் திறப்பு விழா அன்று ஆள் செட் பண்ணி, குண்டு வீச பிளான் போட்டது உங்க பிள்ளை தான் என்று நந்தினி சொன்னதும் வெடவெடத்துப் போனார் விசாலாட்சி. இதையெல்லாம் அறிவுக்கரசியும் கேட்டுவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
விசாலாட்சியை கிளப்பிவிட்ட முல்லை

ஆதி குணசேகரன் எங்கு இருக்கிறார் என்கிற எந்தவித அப்டேட்டும் வராததால் தானே களத்தில் இறங்க முடிவு செய்கிறார் அறிவுக்கரசி. இதனால் வீட்டில் ஃபுட் டிரக் பிசினஸிற்காக தயார் செய்த உணவுகளை விசாலாட்சி அருகில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்க, அவரை கிச்சனில் இருந்து விரட்ட முடிவெடுத்து, மறைமுகமாக நின்று விச்சு என அழைக்கிறார் முல்லை. யாருடா அது என கிச்சனில் இருந்து எழுந்து வரும் விசாலாட்சி, வெளியே இருந்த முல்லையிடம் நீயாடா கூப்பிட்ட என கேட்கிறார். அதற்கு அவர், நானே இங்க வலியில துடிச்சிட்டு இருக்கேன். நான் எதுக்கு உங்களை கூப்பிட போறேன் என சொல்கிறார்.

34
அறிவுக்கரசி செய்யும் சகுனி வேலை

வழக்கமாக தர்ஷினி தான் தன்னை விச்சு என அழைப்பார் என்பதால், அவர் கூப்பிட்டிருப்பாரோ என்பதை தெரிந்துகொள்ள மாடிக்கு செல்கிறார் விசாலாட்சி. அவர் மாடிக்கு சென்ற கேப்பில் கிச்சனுக்குள் நுழைகிறார் அறிவுக்கரசி. முல்லை, யாராவது வருகிறார்களா என்பதை பார்த்துக்கொள்ள வெளியே நிற்கிறார். அப்போது கிச்சனில், சாப்பாடு தயார் நிலையில் இருந்த நிலையில், அதில் ஒரு டபராவை திறந்து பார்க்கும் அறிவுக்கரசி, தான் கையில் கொண்டு வந்த ஒரு பொருளை அதில் கலக்கப் பார்க்கிறார். அப்போது ஜனனி வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். உடனே கிச்சன் வாசலில் இருக்கும் முல்லை, வாங்க ஜனனி மேடம் என சொல்கிறார்.

44
அரங்கேறப்போகும் அதிரடி

வேகமாக செல்லும் ஜனனி, இவன் எதுக்கு இங்க நிற்கிறான் என சந்தேகப்பட்டு கேட்கிறார். அதற்கு முல்லை, எனக்கு இங்க தான் சாய்ந்துகொள்ள வசதியாக உள்ளது. அதனால் இங்க நிற்கிறேன் என சொல்கிறார். பின்னர் கிச்சனுக்குள் நுழைந்து பார்க்கிறார் ஜனனி. அப்போது தான் உள்ளே அறிவுக்கரசி ஓரமாக ஒளிந்திருப்பது அவருக்கு தெரிகிறது. இதனால் ஜனனியிடம் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். இதையடுத்து அறிவுக்கரசியை ஜனனி என்ன செய்யப்போகிறார்? வீட்டில் அடுத்த மோதல் வெடிக்கப்போகிறதா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories