மீனாவை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆன ரோகிணி... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் உடன் சிறகடிக்க ஆசை

Published : Jan 09, 2026, 09:01 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை வீட்டில் உள்ள அனைவருக்கு தெரிந்த நிலையில், அவரை மனோஜ் வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய அனைத்து உண்மையும் முத்துவுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் ரோகிணி வாயாலையே எல்லா உண்மையையும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவைக்க வேண்டும் என முடிவு செய்து, கிரிஷோட அம்மா ரொம்ப கேவலமானவள், தப்பான தொழில் செய்கிறாள் என்று சொல்ல, அதை பொறுத்துக்கொள்ள முடியாத ரோகிணி, முத்துவிடம் சண்டைபோட்டு, நான் தான் கிரிஷோட அம்மா என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டதும் மனோஜ், விஜயா, அண்ணாமலை என அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ரோகிணிக்கு அறைவிட்ட விஜயா

இத்தனை நாளா ஏண்டி பொய் சொன்ன என கேட்டு, ரோகிணியை பளார் பளார் என அறைவிடுகிறார் விஜயா, பின்னர் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் ரோகிணி. அதன்பின்னர் மனோஜிடம் அவர் மன்னிப்பு கேட்க, அவரும் தன் பங்கிற்கு அடிவெளுக்கிறார். ஒரு உண்மையை மறைக்க எவ்வளவு பொய் சொல்லி இருக்கிறீர்கள் எனக் கூறும் ஸ்ருதி, ஒருமுறை சீதாவின் ஆஸ்பத்திரிக்கு சென்று செக் பண்ணும் போது இரண்டாவது குழந்தைக்கு பார்க்க வந்திருப்பதாக சொன்னீர்கள். இரண்டாவது குழந்தையா என கேட்டபோது முதல் குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டதாக சொன்னீர்கள். அதுவும் பொய் தானா என ஸ்ருதி கேட்கிறார்.

35
ரோகிணியை துரத்திவிட்ட மனோஜ்

பின்னர் ரோகிணியை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்கிறார் விஜயா. செல்லும் முன் என் மகன் கட்டிய தாலியை கழட்டி கொடுத்துட்டு போடி என கூறுகிறார். அதற்கு மனோஜ், அவளே வேண்டாம்னு ஆகிப்போச்சு, அவளோட தாலி நமக்கு எதுக்கு என அவரை வெளியே துரத்திவிடப் பார்க்கிறார். ஆனால் ரோகிணி வெளியே செல்ல மறுத்து உள்ளே ஓடிவருகிறார். அண்ணாமலை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அவர் மனம் இறங்க மறுக்க, நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார். அதற்கெல்லாம் செவிசாய்க்காத மனோஜ், ரோகிணியின் கழுத்தை பிடித்து தர தரவென வெளியே தள்ளிவிடுகிறார்.

45
மீனாவை மாட்டிவிட்ட ரோகிணி

பின்னர் வீட்டு வாசலில் கண்ணீருடன் நிற்கும் ரோகிணி, அங்கிருந்து கிளம்பும் முன் மீனாவை மாட்டிவிடுகிறார். ரொம்ப நன்றி மீனா, என்னைப்பத்தி எல்லா உண்மை தெரிஞ்ச ஒரே ஆள் நீங்க தான். அதை முத்துவிடம் சொல்லி என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து விறுட்டென கிளம்பிச் செல்கிறார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரின் பார்வையும் மீனா மீது திரும்புகிறது. அவர் அருகே செல்லும் விஜயா, அவளைப் பற்றி எல்லா உண்மையும் உனக்கு தெரியுமா? நீயும் கூட்டுக் களவாணி தானா என கேட்க, கண்ணீருடன் நிற்கிறார் மீனா.

55
உண்மையை உடைக்கும் மீனா

இதையடுத்து முத்து, மீனாவிடம் எதற்காக உண்மையை மறைச்ச, எத்தனை நாளா இது தெரியும் என கேட்க, கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான் என சொல்லும் மீனா, தனக்கு எப்படி உண்மை தெரிய வந்தது என்பதையும் சொல்லிவிடுகிறார். அதோடு ரோகிணி, நான் உண்மையை சொன்னால், கிரிஷுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதால் தான் இத்தனை நாட்களாக அதை யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்தேன் என கூறுகிறார் மீனா. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் மீனா மீது அப்செட் ஆகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories