தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் பரணி கார்த்திக்கிடம் தனது தாலியை எடுத்து காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் தனக்கு கல்யாணம் ஆன விஷயங்களை சொல்ல, பரணி அதை கேட்டு என்னால் கார்த்தியின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என சந்தோசப்படுகிறாள், அதனை தொடர்ந்து அவன் ஷண்முகம் குறித்து பேச வர அங்கு வரும் சௌந்தரபாண்டி கார்த்தியை பேச விடாமல் தடுத்து தரதரவென இழுத்து சென்று விடுகிறான்.