பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனின் முன்னாள் காதலியான அஞ்சலி அவருக்கு மெசேஜ் பண்ணி பேச தொடங்கி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் தன் மனைவி தங்கமயிலை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவர் கோவிலில் எதிர்பாரா விதமாக தன்னுடைய முன்னாள் காதலியான அஞ்சலியை சந்திக்கிறார். அப்போது இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அந்த சமயத்தில் தனக்கு டைவர்ஸ் ஆன விஷயத்தை கூறுகிறார் அஞ்சலி. இதன்பின்னர் இருவரும் தங்களுடைய போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டனர். அஞ்சலியால் தங்கமயிலின் வாழ்க்கை கேள்விக் குறியாகும் என்பது இந்த சந்திப்பின் மூலமே தெரியவந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ஊருக்கு கிளம்பும் கதிர் - ராஜி
கோச்சிங் கிளாஸிற்காக ராஜியை சென்னைக்கு அழைத்து சென்றிருந்த கதிர், அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு கிளம்ப தயாரான நிலையில், அப்போது ராஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரை ஒரு துணிக்கடைக்கு அழைத்து செல்கிறார் கதிர். அப்போது ராஜிக்கு புடவை வாங்கிக் கொடுக்கிறார் கதிர். அதன்பின்னர் வீட்டில் உள்ள அனைவருக்கும் துணி எடுக்கிறார்கள். பர்சேஸ் முடித்துவிட்டு இருவரும் ஜாலியாக ஊருக்கு திரும்பிச் செல்கிறார்கள்.
35
சரவணன் உடன் சாட்டிங் பண்ணும் அஞ்சலி
மறுபுறம் பாண்டியனும், சரவணனும் கடையில் இருக்கிறார்கள். அப்போது தனக்கு வெளியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு பாண்டியன் கிளம்புகிறார். அந்த நேரத்தில் சரவணனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வருகிறது. யாருன்னு எடுத்து பார்க்கிறார். அவருடைய முன்னாள் காதலியான அஞ்சலி தான் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். சரவணனும் மெசேஜ் பார்த்துவிட்டு, அவருக்கு மறுபடியும் ரிப்ளை பண்ணி பேசுகிறார். இருவரும் கடலைபோட ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் விரைவில் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.
வீட்டிற்கு சென்ற பாண்டியன், சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு கோமதி பரிமாறச் செல்கிறார். ஆனால் பாண்டியன் தன் கையாலேயே இட்லியை எடுத்து போட்டு சாப்பிடுகிறார். அப்போது அங்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பழனி, தன்னுடைய அக்கா கோமதிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இதைக்கேட்ட பாண்டியனுக்கு கோபம் வருகிறது. ஏண்டா உனக்கும் முன்னாடியே உண்மை தெரியுமா என பழனியிடம் பாண்டியன் கேட்க, அதற்கு அவர், சத்தியமா எனக்கு தெரியாது என சொல்லி எஸ்கேப் ஆகிறார்.
55
அவமானப்படுத்தப்படும் தங்கமயில்
அடுத்ததாக தங்கமயில் வீட்டை காட்டுகிறார்கள். அங்கு எல்லோருமே சாப்பிட உட்காருகிறார்கள். தங்கமயிலும் சப்பிட உட்கார்ந்திருக்கிறார். அப்போது தங்கமயிலின் அம்மா, அவரை கேவலமாக திட்டுகிறார். இங்க சாப்பிடுறதுக்கே வக்கில்ல, இதுல இன்னொரு டிக்கெட் வேறையா... ஒழுங்கா சாமர்த்தியமா வாழ துப்பில்ல, இங்க வந்து உட்காந்துகிட்டு வெட்டிசோறு சாப்பிடுறியானு அவருடைய அம்மா தங்கமயிலை கேவலமாக பேச, அவரும் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் சென்றுவிடுகிறார். இதன்பின்னர் ரூமுக்குள் சென்று கதறி அழுகிறார் தங்கமயில். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.